• Sat. Nov 22nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

யானை தாக்கியதில் முதியவர் கால் முறிவு..,

BySeenu

Dec 21, 2023

கோவை நரசிபுரம் விராலியூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக ஒற்றை காட்டு யானை இரவு நேரங்களில் உலா வருகிறது. மேலும் இரவு 8 மணியளவில் காட்டு யானை உலா வந்ததால் அங்கு வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் நேற்று இரவும் அதே பகுதிக்கு வந்த ஒற்றை காட்டு யானை அவ்வழியாக வந்த சின்னசாமி (65) என்பவரை தாக்கியது. இதில் அவருக்கு காலில் முறிவு ஏற்பட்டது. அங்கிருந்த வனத்துறை ஊழியர்களை யானையை விரட்டிவிட்டு அவரை மீட்டு ஆம்புலென்ஸ் மூலம் கோவை அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.