கோவை மாநகராட்சி பகுதிகளில் குப்பையை ஏற்றி செல்வதற்காக 500 க்கும் மேற்பட்ட வாகனங்கள் இயக்கப்படுகின்றன இதற்கான ஓட்டுனர்கள் ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனம் மூலம் பணியாமர்த்தப்பட்டு உள்ளனர். இந்த சூழ்நிலையில் கிழக்கு மண்டலம் மற்றும் மேற்கு மண்டலத்தில் பணிமனைகளில் வாகனங்களை நிறுத்தி இயக்கி வந்த ஓட்டுநர்களை அந்தந்த மண்டலத்துக்குட்பட்ட சுடுகாடுகளில் நிறுத்தி இனி இயக்க வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

இதனை கண்டித்து ஆட்சேபணை தெரிவித்த நான்கு ஓட்டுநர்கள் மீது எந்த முன்னறிவிப்பும் விளக்கமும் இன்றி பணி நீக்க நடவடிக்கையிலும் ஒப்பந்த நிறுவனத்தினர் மாநகராட்சி அதிகாரிகளுடன் இணைந்து கொண்டு ஈடுபடுகின்றனர்.
மேலும் சட்டபூர்வ தொழிலாளரர்கள் பலன்களான இ.எஸ்.ஐ , பி .எப் பிடித்தம் செய்வதை முறையாக தொழிலாளர்கள் கணக்கில் செலுத்தாமல் , காலம் தாழ்த்தி வரும் நிறுவனத்தினர். காழ்ப்புணர்ச்சியுடனும் , ஓட்டுனர்கள் மீது தீண்டாமை எண்ணத்துடன் சுடுகாட்டில் நிறுத்த அதிகாரிகள் கட்டாயபப்டுத்துவதால், அவர்கள் மீது எஸ்.சி.எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தில் புகாரளித்து உள்ள ஓட்டுனர்கள், ஆட்சியர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டதிலும் ஈடுபட்ட்னர் .

மேலும் சுடுகாட்டில் வாகனங்களை நிறுத்த சொல்லும் நடவடிக்கையை கைவிட வேண்டும் , இந்த நடவடிக்கைக்கு ஆட்சேபணை தெரிவித்த ஊழியர்கள் மீது எடுத்த நடவடிக்கைகளை திரும்ப பெற வேண்டும் இல்லாவிட்டால் தொடர் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்தனர்.








