சென்னை விமான நிலையத்தில்,விமானபரப்பு பகுதியில் நடைபெற்று வரும், விரிவாக்க பணிகள் காரணமாக, விமான போக்குவரத்து மற்றும் பயணிகள் நெரிசலை குறைக்க, இந்திய விமான ஆணையம்,இன்று முதல், மாற்று ஏற்பாடுகள் செய்துள்ளது.
அதன்படி சென்னை உள்நாட்டு முனையம் டெர்மினல் ஒன்றிலிருந்து புறப்படும் இண்டிகோ ஏர்லைன்ஸ் ஏடி ஆர் ரக சிறிய விமானங்கள் அனைத்தும், இன்று முதல், டெர்மினல் நான்கிலிருந்து புறப்படும்.

இதனால் இதுவரையில் டெர்மினல் ஒன்றிலிருந்து மதுரை, திருச்சி, தூத்துக்குடி, சேலம், மைசூர், மங்களூர், விஜயவாடா, ராஜமுந்திரி, கோழிக்கோடு ஆகிய இடங்களுக்கு சென்று கொண்டிருக்கும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள், இனிமேல் டெர்மினல் நான்கிலிருந்து பயணிக்க வேண்டும்.
ஆனால் அதே நேரத்தில் இந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் வருகை விமானங்கள் அனைத்தும், வழக்கம்போல் டெர்மினல் ஒன்றில் வந்து தரை இறங்கும் என்று அறிவிப்பு.
சென்னை விமான நிலையத்தில் மூன்றாவது முனையம் என்ற டெர்மினல் 3, புதிதாக கட்டும் பணி, மற்றும் விமானபரப்பில் விரிவாக்க பணிகள் நடந்து கொண்டு இருக்கின்றன. இந்த நேரத்தில் டெர்மினல் ஒன்று புறப்பாடு பகுதியில்,பயணிகள் நெரிசலை குறைக்கவும், விமான போக்குவரத்து நெரிசல்களை முறைப்படுத்தவும், இந்திய விமான நிலைய ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி இன்று முதல், சென்னை உள்நாட்டு முனையம் டெர்மினல் ஒன்றிலிருந்து புறப்படக்கூடிய இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின், ஏ.டி ஆர் எனப்படும் சிறிய ரக விமானங்கள் அனைத்தும், சென்னை உள்நாட்டு முனையம், டெர்மினல் நான்கில் இருந்து புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி புதிய திட்டம் சென்னை விமான நிலையத்தில் அமலுக்கு வந்துள்ளது..
சென்னை விமான நிலையத்தில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் எ டி ஆர் ரக விமானங்கள், மதுரை, திருச்சி, தூத்துக்குடி, சேலம், மைசூர், மங்களூர், கோழிக்கோடு, விஜயவாடா, ராஜமுந்திரி ஆகிய 9 நகரங்களுக்கு, காலையிலிருந்து, இரவு வரையில் 32 ஏ.டி.ஆர் ரக விமானங்கள் இயக்கப்படுகின்றன.
அதில் முதல் விமானம் சென்னையில் இருந்து கோழிக்கோட்டிற்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் ஏ.டி.ஆர் ரக விமானம், இன்று அதிகாலை 5.10 மணிக்கு புறப்பட்டு சென்றது. அதைப்போல் ஏ.டி ஆர் ரக இண்டிகோ ஏர்லைன்ஸ் கடைசி விமானம், இரவு 9.05 மணிக்கு, சென்னையில் இருந்து திருச்சிக்கு புறப்பட்டு செல்கிறது.

இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் ஏடி ஆர் ரகத்தை சேர்ந்த, இந்த 36 விமானங்களும், சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு முனையம் டெர்மினல் நான்கில் இருந்து புறப்பட்டு செல்லும். ஆனால் அதே நேரத்தில் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் பெரிய ரக விமானங்கள் டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், திருவனந்தபுரம், கொச்சி, பெங்களூர், கோவை உள்ளிட்ட பல்வேறு நகர்களுக்கு செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானங்கள், அனைத்தும் வழக்கம் போல், சென்னை உள்நாட்டு விமான முனையம், டெர்மினல் ஒன்றிலிருந்து புறப்பட்டு செல்லும்.
இண்டிகோ ஏர்லைன்ஸ் வருகை விமானங்கள் ஏ ற்றி ஆர் ரக சிறிய விமானங்கள், பெரிய விமானங்கள் அனைத்தும், உள்நாட்டு முனையம் டெர்மினல் ஒன்றில் வழக்கம் போல் வந்து தரை இறங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இந்த மாற்று ஏற்பாடு திட்டத்தை கடைப்பிடிக்கும்படி, சென்னை விமான நிலைய அதிகாரிகள், இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவன பயணிகளை அறிவுறுத்தி உள்ளனர்.
இதனை வரவேற்கும் விதமாக டெர்மினல் நான்கில் உள்ள அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் கேக் வெட்டி கொண்டாடினர்.