



நவராத்திரியின் பத்தாம் நாளான விஜயதசமியான இன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஶ்ரீ வனமாலிஸ்வரர்(சரஸ்வதி ஆலயத்தில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது- இதில் முதல் முறையாக பள்ளியில் சேர்க்க உள்ள குழந்தைகளுக்கு கல்வி எழுத்தறிவை ஆரம்பிக்கும் ஏடு வாசித்தல், நாவில் அச்சாரமும் எழுதப்பட்டது- இதில் குமரி மட்டுமல்லாமல் கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான பெற்றோர்கள் தங்கள் குழந்தையை அழைத்து வந்து விஜயதசமி வித்யாரம்பம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
நவராத்திரி கடந்த 9 நாட்கள் மிக விமர்சையாக கொண்டாடப்பட்டது பத்தாம் நாளான இன்று விஜயதசமி கொண்டாடப்பட்டு வருகிறது,இந்த விஜயதசமி பண்டிகையானது எழுத்தறிவை போதிக்கும் நிகழ்வாக பார்க்கப்படுகிறது.இதில் நெல், பச்சரிசியைக் கொண்டு அச்சரம் எழுதி குழந்தைகள் தங்களின் கல்வியை தொடங்க செய்யும் பண்டிகையாக இருந்து வருகிறது,விஜயதசமியான இந் நாளில் கல்வி, கலைகள் என எது தொடங்கினாலும் ஜெயமாக முடியும் என்பது நம்பிக்கையாக உள்ளது, அதனை வித்யாரம்பம் என அழைக்கிறோம், இதனை இன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பிரசித்தி பெற்ற உள்ள வனமாலிஸ்வரர்( சரஸ்வதி கோவிலில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு வந்து தங்களின் குழந்தைகளுக்கு கல்வியை ஆரம்பித்து வைக்கும் விதமாக நாவில் அச்சாரம் எழுதும் நிகழ்ச்சி நடைபெறும்,அந்த வகையில் இந்த ஆண்டும் இன்று மிக விமர்சியாக நடைபெற்று வருகிறது,இதில் ஆலயத்தில் குருமார்கள் அமர்ந்து குழைந்தையை தாயின் மடியில் அமர செய்து குழந்தையின் நாவில் தங்க ஆணியால் அ என எழுத்தை தொடங்கி வைத்து வருகின்றனர்,அதே போன்று ஏடு குழந்தையின் கையில் கொடுத்து அ,ஆ,இ,ஈ என அகரத்தை வாசிக்க ஆரம்பித்து வைக்கவும் செய்தனர்,மேலும் தாம்பாளத்தில் பரப்பிய பச்சரிசியில் குழந்தையின் விரல்களை பிடித்து அ’ என்று எழுத கற்றுக் கொடுத்தனர், இந்த நிகழ்வுக்கு குமரி மாவட்டம் மட்டுமல்லாமல் கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் தங்களின் குழந்தைகளை அழைத்து வந்து விஜயதசமி பண்டிகையான வித்யாரம்பம் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.



