மதுரை மாநகரில் பெய்த மழை காரணமாக பந்தல்குடி கால்வாய் மற்றும் மாநகர பகுதிகளில் உள்ள கழிவுநீர் கால்வாயிலில் மழை நீர் கலந்து நிரம்பியது. இதனால் கால்வாய்களில் இருந்து மழை நீர் கழிவுநீருடன் சேர்ந்து வைகை ஆற்றுக்குள் பெருக்கெடுத்து ஓட தொடங்கியுள்ளது.
கருப்பு நிறத்தில் மழை நீரோடு சேர்ந்து கழிவுநீரும் ஆற்றுக்குள் பெருக்கெடுத்து ஓடுவதால் மதுரை ஆழ்வார்புரம் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளகூடிய பகுதியில் கழிவு நீர் முழுவதும் கலந்து வருகிறது.

மேலும் கழிவுநீருடன் சேர்ந்து பெரிய அளவிலான பல்வேறு வகை பாம்புகளும் சுற்றித்
திரிவதால் வைகை கரையை ஒட்டியுள்ள பொதுமக்களும் பந்தல்குடி கால்வாய் கரை ஒட்டி உள்ள பகுதி உள்ள பொதுமக்களும் கடும் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர்.
தொடர்ந்து இருகரைகளைஉரசியவாறு தண்ணீர் ஓடக்கூடிய நிலையில் மழை தொடர்ந்ததால், வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து விடும் என்றஅச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர்.
மாநகராட்சி பகுதிகள் கால்வாயில் உள்ள ஆகாயத்தாமரை செடிகள் மற்றும் குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
