ஆர்.பி.உதயகுமாருக்கு எல்லாம் பதில் சொல்ல தயாராக இல்லை என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
கோவையில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், எதையும் எதிர்பார்க்காமல் அதிமுகவுக்கு உழைக்கும் உன்னதத் தொண்டன்தான் செங்கோட்டையன். அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்றுதான் அம்மாவின் தொண்டர்கள் விரும்புகின்றனர். கட்சி ஒன்றிணைந்தால்தான் தேர்தலில் வெல்ல முடியும் என்பதை தொண்டர்கள் உணர்ந்துள்ளனர்.
ஆர்.பி.உதயகுமாருக்கு எல்லாம் பதில் சொல்ல நான் தயாராக இல்லை. அவர் பேசுவதை பேசட்டும். மக்கள் பார்த்துக் கொள்வார்கள். பிரிந்தவர்கள் ஒன்றிணைந்தால்தான், அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வர முடியும். அதிமுக ஒன்றிணைய வேண்டுமென்றால், அவர்கள் ஈகோவை கைவிட வேண்டும். கட்சி பிளவு பட நான் விரும்பவில்லை எனக் கூறினார்.