• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் உண்டியல் எண்ணிக்கை

ByKalamegam Viswanathan

Mar 21, 2023

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் முதல் நாள் உண்டியல் காணிக்கை 2 கோடியே 91 லட்சத்து 86 ஆயிரத்து 546 கிடைத்துள்ளது
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு கடந்த 48 நாட்கள் மண்டலபூஜை நடைபெற்றது. இதனால் பக்தர்கள் கூட்டம் குவிந்தது. பக்தர்கள் கூட்டம் காரணமாக கடந்த 30 நாட்களில் உண்டியல்கள் நிரம்பியது.

இதையடுத்து நேற்று உண்டியல்கள் திறக்கப்பட்டு மலைக்கோயில் மண்டபத்தில் வைத்து எண்ணப்பட்டது. முதல்நாள் எண்ணிக்கையில் பக்தர்களின் காணிக்கை வரவாக ரொக்கம் ரூபாய் இரண்டு கோடியே 91 இலட்சத்து 86 ஆயிரத்து 546 கிடைத்துள்ளது. தங்கம் 1,029 கிராமும், வெள்ளி 33 ஆயிரத்து 67 கிராமும், வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 762 ம் கிடைத்துள்ளது. உண்டியலில் பக்தர்கள் தங்கத்தாலான வேல், தாலி, மோதிரம், செயின், தங்கக்காசு போன்றவற்றையும் வெள்ளியால் ஆன காவடி, வளையம், வீடு, தொட்டில், வேல், கொலுசு, பாதம் போன்றவற்றையும் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். இவை தவிர பித்தளை வேல், ரிஸ்ட் வாட்ச், ஏலக்காய், முந்திரி, நவதானியங்கள், பட்டாடைகளையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். உண்டியல் எண்ணிக்கையில் திருக்கோயில் கல்லூரி பணியாளர்கள், திருக்கோயில் அலுவலர்கள், வங்கி பணியாளர்கள் என நூற்றுக்கணக்கானோர் ஈடுபட்டனர்.