• Sun. Jan 11th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

58 கால்வாயில் தண்ணீர் திறக்க கோரி டிசம்பர் 1-ல் உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு…

ByP.Thangapandi

Nov 26, 2023

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி 58 கிராம கால்வாயில் தண்ணீர் திறக்க அரசு கால தாமதப்படுத்தி வருவது தொடர்பாகவும், விரைவில் தண்ணீர் திறக்க அரசுக்கு கோரிக்கை விடுக்கும் வண்ணமும், காலதாமதப்படுத்துவதற்கு கண்டனத்தை தெரிவிக்கும் விதமாக போராட்டங்களை நடத்துவது தொடர்பாக இன்று உசிலம்பட்டி சந்தைப்பகுதியில் உள்ள தேவர் மண்டபத்தில் அரசியல் கட்சி நிர்வாகிகள் மற்றும் அனைத்து விவசாய சங்கங்கள் இணைந்து ஆலோசனை கூட்டம் நடத்தினர்.,

இந்த ஆலோசனை கூட்டத்தில் கால தாமதப்படுத்தி வரும் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் முதற்கட்டமாக வரும் டிசம்பர் 1ஆம் தேதி ஆயிரக்கணக்கான விவசாயிகளையும், பொதுமக்களையும் திரட்டி மாபெரும் உண்ணாவிரத போராட்டத்தை நடத்துவது என்றும், அடுத்தடுத்து வர்த்தக சங்கங்களுடன் இணைந்து முழு கடையடைப்பு மற்றும் சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுக்க இந்த ஆலோசனை கூட்டத்தில் ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.,