• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

அக்.29ல் துவங்கவுள்ள வடகிழக்கு பருவமழை

ByA.Tamilselvan

Oct 26, 2022

தமிழகத்தில் வரும் அக்.29 ல் வடகிழக்கு பருவமழை துவங்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலைமையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 20ம் தேதி தொடங்கி ஜனவரி மாதம் வரை பெய்யும். அதே போல இந்த ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி தொடங்கும் என்று எதிர்பார்த்த நிலையில், பருவமழை தொடங்கும் நாள் தள்ளிப் போகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் அக்டோபர் 25ம் தேதி மழை பெய்யத் தொடங்கியது. அதனால் அதிக அளவி்ல் தமிழகத்துக்கு மழை கிடைத்தது. இந்த ஆண்டு தென் மேற்கு பருவமழை கேரளாவில் பெய்யத் தொடங்கியதில் இருந்தே தமிழகத்திலும் மழை பெய்து கொண்டே இருந்ததால் பெரும்பாலான நீர் நிலைகள் நிரம்பியுள்ளன. அதன் அடிப்படையில் இந்த ஆண்டு அக்டோபர் 21, அல்லது 22ம் தேதிகளில் தொடங்கிவிடும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் அக்.29ல் வடகிழக்கு பருவமழை துவங்க வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நடப்பாண்டு வடகிழக்குப் பருவமழை 88 சதவிகிதம் 112 சதவிகிதம் என்ற அளவில் இருக்கும். அக்டோபர் மாதத்தில் வடகிழக்குப் பருவமழை இயல்பை விட அதிகமாக 115 சதவிகிதத்திற்கு மேல் இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.