தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை விட கூடுதலாக பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததாவது..,
இந்த ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி முதல் இன்று வரை இயல்பை விட 84விழுக்காடு கூடுதலாக மழை பெய்துள்ளதாகவும், அதிகபட்சமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் 189விழுக்காடும், கரூர் மாவட்டத்தில் 188 விழுக்காடும் கூடுதலாக மழை பெய்துள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.
