• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

நூடுல்ஸ் திரை விமர்சனம்..!

Byஜெ.துரை

Sep 6, 2023

அருண் பிரகாஷ், சுருளி ராஜ் தயாரிப்பில் மதன் தக்ஷிணாமூர்த்தி இயக்கத்தில் வெளிவரவிருக்கும் திரைப்படம் “நூடுல்ஸ்”. இத்திரைப்படத்தில் ஹரிஷ்,வசந்த் மாரிமுத்து,ஷோபன் மில்லர் திருநாவுக்கரசு, ஜெயந்தி, மஹினா, ஆழியா ஆகியோர் உட்பட நடித்துள்ளனர். சில கதப்பாத்திரங்களை மட்டுமே வைத்து கொண்டு ஒரு வீட்டுக்குள் நடக்கும் கதை தான் நூடுல்ஸ்.

கதையின் நாயகனாக நடித்திருக்கும் ஹரிஷ், கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். தன் நடிப்பு மூலம் பார்வையாளர்களையும் படம் முடியும் வரை பதற்றத்துடனே வைத்திருக்கிறார். வழக்கமான தனது அசத்தலான நடிப்பு மூலம் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார் ஷீலா ராஜ்குமார்.

ஹரிஷின் மனைவியாக நடித்திருக்கும் அவரது ஒவ்வொரு அசைவும் காட்சிகளை கண் இமைக்காமல் பார்க்க வைக்கிறது.

ஹரியின் குடியிருப்பு வாசி வேடத்தில் நடித்திருக்கும் திருநாவுக்கரசு, அவரது மனைவியாக நடித்திருக்கும் ஜெயந்தி, மஹினா, வழக்கறிஞராக நடித்திருக்கும் வசந்த் மாரிமுத்து, போலீஸ் கான்ஸ்டபிளாக நடித்திருக்கும் ஷோபன் மில்லர் என படத்தில் நடித்திருக்கும் அனைவரும் தங்களது நடிப்பு மூலமாக திரைக்கதைக்கு கூடுதல் சுவாரஸ்யம் சேர்த்திருக்கிறார்கள்.

வழக்கறிஞராக நடித்திருக்கும் வசந்த் மாரிமுத்து, ஆரம்பத்தில் கெத்தாகவும், வேகமாகவும் பேசிவிட்டு பிறகு படபடப்பாக இருக்கும் காட்சிகள் அனைத்தும் திரையரங்கையே குலுங்கி குலுங்கி சிரிக்க வைக்கிறது. குழந்தை நட்சத்திரம் ஆழியா, சிறுவர்கள் என அனைவருமே மிக இயல்பாக நடித்து அசத்தியிருக்கிறார்கள்.

கதை முழுவதும் ஒரு வீட்டுக்குள் அதிலும் சிறு அறைகளுக்குள் பயணித்தாலும் அந்த உணர்வே ஏற்படாத வகையில் நடிகர்களின் உணர்வுகளை மிக நேர்த்தியாக ரசிகர்களிடம் கடத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் டி.வினோத் ராஜா.

ராபர்ட் சற்குணத்தின் பின்னணி இசை காட்சிகளுக்கு பலம் சேர்த்திருக்கிறது. அருவி மதன் இதில் போலீஸ் இன்ஸ்பெக்டராக வழக்கம் போல் நடிப்பில் பாராட்டு பெற்றிருப்பதோடு, திரையுலகினர் வியந்து போகும் விதத்திலும் அசத்தியுள்ளார்.

இறுதிக் காட்சி நெருங்க நெருங்க என்ன நடக்கப் போகிறது என்ற பதற்றத்துடன் நம்மை இருக்கையை விட்டு நகர விடமால் செய்துள்ளார் இயக்குநர். இறுதியில் திரையரங்கே ஆரவாரம் செய்யும் விதத்திலான க்ளைமாக்ஸோடு படத்தை முடிக்கிறார்.

நிச்சயம் இந்த படம் சினிமா ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுப்பதோடு விறுவிறுப்பையும் ஆச்சரியத்தையும் கொடுக்கும். மொத்தத்தில் நூடுல்ஸ் சுவாரஸ்யம் நிறைந்த திரைப்படம்.