திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இந்திய ஆரி தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் வீட்டில் முடங்கி கிடக்கும் பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையிலும் ,பெண்களுக்கான சுயதொழில் வேலைவாய்ப்பை ஏற்படுத்தவேண்டும் என்ற முயற்க்கான நோபல் உலக சாதனை நிகழ்ச்சி தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் தமிழகத்தில் இருந்து ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். இந்திய தாய்திருநாட்டின் 79 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து பெண்களுக்கும் 1.30 மணி நேரத்தில் இந்திய தேசிய கொடியை ஆரி வேலையின் மூலம் தங்களது கைவண்ணத்தில் செய்தும் காண்பித்தும் , தையல் இயந்திரம் இல்லாமல் வெறும் கைகளால் ஆடைகளை தைத்தும் ,அழகு கலையை ஊக்குவிக்கும் விதமாக மணப்பெண் அலங்கார அழகு கலை போட்டியும் நடைபெற்றது.
இதில் சௌந்தர்யா என்ற பெண் கணவரை விட்டு பிரிந்த நிலையில் சிலம்பம் கற்று கொண்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவசமாக சிலம்பம் கற்று கொடுத்த வரும் அந்த பெண் அனைவரும் முன்னாள் சிலம்பம் சுற்றியதை கண்டு பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி செந்தில்குமார் மனைவி மெர்சி பாராட்டி கேடயத்தை பரிசாக அளித்தார். மேலும் கலந்து கொண்ட அனைவருக்கும் பரிசுகள் ,மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கபட்டது. இந்நிகழ்ச்சியினை சுஜாதா ஏற்பாடு செய்திருந்தார்.