தேனியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நோபல் உலக சாதனையை செய்து முடித்த 300-க்கும் மேற்பட்ட பெண்கள் தேனியில் உள்ள தனியார் மண்டபத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பொதுமக்கள் அனைவரும் கதர் ஆடையை பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கிலும்*

கிராமத்தில் உள்ள பெண்கள் மற்றும் அனைத்து பெண்களும் தொழில் முனைவராகமாற்ற வேண்டும்
என்ற எண்ணத்தில் இந்தியா ஆரி வேலை தொழிலாளர்கள் கூட்டமைப்பு சார்பில் நோபல் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது
பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார் ,ஏடிஎஸ்பி கலைக்கதிரவன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இந்த நிகழ்வில் திட்ட குழு உறுப்பினர் நாராயணசாமி பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

மேலும் சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்று ஆரி வேலை குறித்தும் மொகந்தி உள்ளிட்ட பல்வேறு விதமான செயல்பாடுகள் குறித்தும் சிறப்புரையாற்றினார்கள்.
அதேபோல் காந்தி ஜெயந்தியை சிறப்பிக்கும் வகையில் கதர் ஆடைகளை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கில் நடைபெற்றது.
இந்த உலக சாதனை நிகழ்வில் நிகழ்வில் பங்கேற்ற அனைவரையும வாழ்த்தி பேசினார்கள் இந்தியா ஆரி வேலை தொழிலாளர்கள் கூட்டமைப்பின் தேசிய தலைவர் அரவிந்த் லட்சுமி நாராயணன், தமிழகத்தின் தலைவர் ராஜராஜேஸ்வரி, பொருளாளர் ராஜலட்சுமி ,செயலாளர் பரமேஸ்வரி ஆகியோர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் பிரியதர்ஷினி இணை செயலாளர் ராஜேஸ்வரி ஆகியோர் வரவேற்புரை நிகழ்த்தினார்கள்.
இந்த நிகழ்வின் ஒருங்கிணைப்பினை வைரம் பேஷன் அகடாமி நிறுவனத் தலைவர் தேன்மொழி விழா ஒருங்கிணைப்பினை செய்திருந்தார்
மகாத்மா காந்தியின் நினைவினை போற்றும் வகையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் 300க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று நெசவு நெய்தல், கைத்தறி நெய்தல் ,மேக்கப் செய்தல், மெஹந்தி வரைதல் உட்பட பல்வேறு போட்டிகளில் பங்கேற்றும் உலக சாதன நிகழ்வில் பங்கேற்றும் மகிழ்ந்தனர்.
300க்கும் மேற்பட்ட நபர்கள் பங்கேற்ற இந்த நிகழ்வில் கைத்தறி மேக்கப் மெஹந்தி வரைதல் ஆகிய போட்டிகளில் சிறப்பாக செய்திருந்த முதல் மூன்று நபர்களுக்கு சிறப்பு பரிசுகளும் இந்த நிகழ்வில் பங்கேற்ற அனைத்து நபர்களுக்கும் உலக சாதனை புரிந்த சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

மேலும் இந்த விழாவின் ஒருங்கிணைப்பினை செய்த வைரம் பேஷன் அகாடமி நிறுவன தலைவர் தேன்மொழி செய்தியாளர் சந்திப்பில் கூறும் பொழுது மகாத்மா காந்தியின் நினைவினை போற்றும் வகையிலும் அவருடைய பிறந்த நாளை முன்னிட்டும் பெண்கள் அனைவரும் தொழில் முனைவராக திகழ வேண்டும்.
நோக்கில் காந்தியின் கனவை நினைவாக்கும் வகையில் இந்த உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது .
என்றும் ஆரி வேலை தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில் மிக விரைவில் பெண்களின் முன்னேற்றத்திற்காக அவர்களை தொழில் முனைவோர்களாக மாற்றும் விதத்தில் இலவசமாக ஆரி, கைத்தறி நெய்தல் மேக்கப் செய்தல் மெஹந்தி வரைதல் உட்பட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படும்.
தெரிவித்தனர் இந்த நிகழ்வின் போது ஆரி தொழிலாளர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள்,நோபல் உலக சாதனை நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர்கள்,மற்றும் பலர் இந்த நிகழ்வில் ஏராளமான பங்கேற்றனர்.