• Tue. Dec 16th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

குடிமகன்களுக்கு ஷாக்கிங் நியூஸ்.. ஆட்சியர் பிறப்பித்த திடீர் உத்தரவு!

Nilagiri

மது வாங்க தடுப்பூசி அவசியம் என நீலகிரி ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா 2-வது அலை குறைந்து வருகிறது. தமிழகத்தில் நாளுக்கு நாள் தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு முழு அதிகாரத்தை அரசு வழங்கியுள்ளது.
இந்நிலையில், இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை காண்பித்தால் மட்டுமே இனி மதுபானம் வழங்கப்படும் என்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

மேலும், தடுப்பூசி போடாதவர்களுக்கு மதுபானம் விற்பனை இல்லை எனவும், நீலகிரி மாவட்ட மக்கள் 97 சதவிகித பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
நீலகிரியில் சில இடங்களில் மது அருந்துபவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை என்பதால் அவர்களும் தடுப்பூசி செலுத்தவே இந்த திட்டத்தை கொண்டு வந்ததாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.