• Sat. Dec 20th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

எனது சின்னம் மைக் இல்லாமல் யாரும் ஓட்டு கேட்க முடியாது. சிவகாசியில் நடந்த பரப்புரையில் சீமான்பேச்சு…

ByG.Ranjan

Mar 30, 2024

சிவகாசி அருகே திருத்தங்கல் அண்ணா சிலை முன் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், விருதுநகர் தொகுதி வேட்பாளர் கௌசிக்கை ஆதரித்து நேற்று மாலை பிரச்சாரம் செய்தார்.

அப்போது பேசிய பேசியதாவது: நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர்கள், இன்ஜினியர்கள், பேராசிரியர்கள் என படித்தவர்களை வேட்பாளராக நிறுத்தியுள்ளோம். இவர்கள் வெற்றி பெற்று பாராளுமன்றம் செல்லும்போது அடித்தட்டு மக்களின் பிரச்சினைகளை எதிரொலிப்பார்கள். என் சின்னமான மைக் இல்லாமல் எந்த சின்னத்திற்கும் யாரும் ஓட்டு கேட்க முடியாது. தவிர பிரச்சாரம் செய்பவர்கள் அனைவரும் எங்களது சின்னத்தை வைத்துதான் ஓட்டு கேட்கின்றனர். பெண்களுக்கும் ஒடுக்கப்பட்ட மற்றும் அரசியல் அங்கீகாரம் இல்லாத சமூகத்தினருக்கு தேடி தேடி வாய்ப்பளிப்பது நாம் தமிழர் கட்சி மட்டும் தான், என்றார்.