• Tue. Nov 18th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

இனி புராதன சின்னங்களை பார்க்க ஆன்லைனில் டிக்கெட்

Byகாயத்ரி

Jan 10, 2022

மாமல்லபுரத்தில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள புராதன சின்னங்களை அருகில் சென்று பார்க்க வெளிநாட்டவருக்கு ரூ.600, உள்நாட்டவருக்கு ரூ.40 என நுழைவு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

கொரோனா 2-வது அலையின்போது தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நுழைவு சீட்டுகள் ஆன்லைனில் மட்டுமே வழங்கப்பட்டது.இதனால் ஆன்டிராய்டு போன் இல்லாதவர்களும், கிராமத்து சுற்றுலா பயணிகளும் டிக்கெட் எடுப்பதில் சிரமப்பட்டு வந்தனர். கடந்த டிசம்பர் மாதம் கொரோனா தொற்று குறையத் தொடங்கியது.

ஆன்லைன் டிக்கெட் நிறுத்தப்பட்டு கவுன்டரில் பணம் செலுத்தி டிக்கெட் வழங்கப்பட்டது.தற்போது ஒமைக்ரான், கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மீண்டும் தொல்லியல்துறை இன்று முதல் புராதன சின்னங்களை பார்க்க ஆன்ராய்டு போன் மூலம் பார்கோர்டு ஸ்கேன் செய்து ஆன்லைனில் மட்டுமே டிக்கட் வழங்கும் முறையை தொல்லியல் துறையினர் நடைமுறைபடுத்தி உள்ளனர்.