
தமிழக அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் தானியங்கி முறையில் பயணச்சீட்டு வழங்கும் முறை அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ரூ.86 கோடி செலவில் இந்தத் திட்டம் முதல்கட்டமாக சென்னை, கோவை, மதுரை போக்குவரத்துக் கழகங்களில் அறிமுகம் செய்ய திட்டமிடபட்டுள்ளது. இதன்படி தானியங்கி முறையில் தேசிய பொதுப் பயண அட்டை, க்யூஆர் கோட் ஆகியவை மூலம் பயணச் சீட்டு வழங்கும் முறை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. டிக்கெட் வாங்குவதற்காக சில்லறையாக கொண்டு செல்ல வேண்டும் என்ற சிக்கல் இனி இருக்காது என்பதால் பயணிகளிடம் இந்த திட்டம் நிச்சயம் வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கலாம்.

