• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

10 நிமிட டெலிவரி கிடையாது – சொமேட்டோ அறிவிப்பு..!

சென்னையில் 10 நிமிட உணவு டெலிவரி திட்டம் அறிமுகப்படுத்தப்படாது என சென்னை காவல் துறையிடம் சொமேட்டோ விளக்கம் அளித்துள்ளது.

பிரபல உணவு டெலிவரி நிறுவனமான சொமேட்டோ வாடிக்கையாளர்கள் உணவு ஆர்டர் செய்த 10 நிமிடங்களில் டெலிவரி செய்யப்படும் என அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியான பிறகு கடுமையாக விமர்சனம் எழுந்தது. இந்த அறிவிப்பால் குறைந்த நேரத்தில் உணவு வழங்க வேண்டும் என்பதற்காக சாலை விபத்துகள் அதிகரிக்கக் கூடும் என்றும் உணவு விநியோகம் செய்யும் நபர்கள் போக்குவரத்து விதிகளை மீறுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக பலர் விமர்சனம் செய்தனர்.

10 நிமிடத்தில் டெலிவரி திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பது குறித்து முழுமையான விளக்கம் கேட்கப்படுமென சென்னை போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், 10 நிமிட உணவு டெலிவரி திட்டம் சென்னையில் அறிமுகப்படுத்தப்படாது என சொமேட்டோ அறிவித்துள்ளது. சொமேட்டோ இந்த திட்டத்தை அறிமுகம் செய்ய நினைத்தால் சென்னை நகர காவல்துறையின் முன் அறிவுறுத்தல் மற்றும் ஆதரவுடன் அறிமுகப்படுத்தப்படும் என சொமேட்டோ தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.