• Sat. Nov 15th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

சாமியார் ஆனார் நிவின் பாலி!

புகழ்பெற்ற எழுத்தாளர் எம்.முகுந்தனின் கதையை தழுவி உருவாக்கப்பட்ட, அப்ரித் ஷைனியின் “மஹாவீர்யார்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது. சாமியார் கெட்அப்பில் நிவின் பாலி இருக்கும் இந்த போஸ்டர் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

நிவின் பாலி மற்றும் ஆஷிஃப் அலி லீட் ரோலில் நடிக்கும் இப்படம், ஃபேண்டஸி, டைம் ட்ராவல், சட்ட நுணுக்கங்கள், சட்ட புத்தகங்களை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. மிகப்பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படம் ரசிகர்களுக்கு ஒரு புதுமையான பேரனுபவமாக இருக்குமென்று திரைப்படக்குழு உறுதியளித்துள்ளது. Pauly Jr Pictures நிறுவனம் சார்பில் நிவின் பாலி மற்றும் Indian Movie Makers சார்பில் PS சம்னாஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.

கொச்சியில் நடைபெற்ற விழாவில் எழுத்தாளர் M.முகுந்தன் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்டார். திரைக்கதை ஆசிரியர் மற்றும் இயக்குநர் அப்ரித் ஷைனி, ஆஷிஃப் அலி, ஷான்வி ஶ்ரீவஸ்தவா மற்றும் இணை தயாரிப்பாளர் PS சம்னாஸ் ஆகியோர் இவ்விழாவில் பங்கேற்றனர். “மாஹாவீர்யார்” திரைப்படம் வர்த்தக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றிபெற்ற 1983 மற்றும் ஆக்சன் ஹீரோ பிஜு படங்களுக்கு பிறகு நடிகர் நிவின் பாலி மற்றும் இயக்குநர் அப்ரித் ஷைனி இணைந்து பணியாற்றும் மூன்றாவது திரைப்படம் ஆகும்.

நடிகர் நிவின் பாலி மற்றும் இயக்குநர் அப்ரித் ஷைனி ஆகியோர் கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு பிறகு இப்படத்தில் மீண்டும் இணைகிறார்கள். இப்படம் கொரோனா கட்டுப்பாடுகள் நிலவிய கடுமையான காலகட்டத்தின் மத்தியில், ராஜஸ்தான், கேரளா ஆகிய இடங்களில் பெரும் பட்ஜெட்டில் பிரமாண்டமாக படமாக்கப்பட்டுள்ளது.

அப்ரித் ஷைனி திரைக்கதை எழுதியுள்ள இப்படத்தில் லால், லாலு அலெக்ஸ், சித்திக், ஷான்வி ஶ்ரீவஸ்தாவா, விஜய் மேனன், மேஜர் ரவி, மல்லிகா சுகுமாரன், கிருஷ்ண பிரசாத், சுராஜ் S குரூப். சுதீர் கரமனா, பத்மராஜன் ரதீஷ், சுதீர் பரவூர், கலாபவன் பிரஜோத், பிரமோத் வெலியனாடு, ஷைலஜா P அம்பு மற்றும் பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப குழுவில் சந்துரு செல்வராஜ் (ஒளிப்பதிவு), இஷான் சாப்ரா (இசை), மனோஜ் (எடிட்டர்), Sound Factor சார்பில் விஷ்ணு கோவிந்த் மற்றும் ஶ்ரீ சங்கர் ( சவுண்ட் டிசைன்) அனீஷ் நாடோடி (கலை இயக்கம்) சந்திரகாந்த் சொனாவானே மற்றும் மெல்வி J (உடைகள்) லிபின் மோகனன் (மேக்கப்) மற்றும் LB ஷ்யாம் லால் (புரொடக்சன் கண்ட்ரோலர்) ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.