• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

தனுஷ்சை காப்பாற்றிய நித்யாமேனன்

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்று வரும் படம் திருச்சிற்றம்பலம். இப்படத்திற்கு அனிருத் இசை பக்கபலமாக இருந்தது.
இப்படத்தில் நடிகை நித்யாமேனனின் கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. இப்படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் பாயிண்டாக அவரது நடிப்பு இருந்தது.
படத்தில் ஒவ்வொரு காட்சியிலும் அவரது சிரிப்பு, நடிப்பு என அனைத்தும் வேற லெவல் இருந்தது. திருச்சிற்றம்பலம் படத்திற்கு பிறகு நித்யா மேனனுக்கு தனி ரசிகர் கூட்டமே உருவாகியுள்ளது.
ஆனால் திருச்சிற்றம்பலம் படத்திற்காக தனுஷ் வேறு மூன்று நடிகைகளை முதலில் தேர்வு செய்துள்ளார். அதாவது முதலில் Wunderbar Films இப்படத்தை தயாரிப்பதாக இருந்தது. அந்தச் சமயத்தில் நித்யாமேனன் கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிப்பதாக இருந்தது.மேலும் பிரியா பவானி சங்கர் கதாபாத்திரத்தில் சமந்தாவும், ராசி கண்ணா கதாபாத்திரத்தில் ஹன்சிகா நடிப்பதாக தேர்வாகியுள்ளனர். ஆனால் திருச்சிற்றம்பலம் படம் சன் பிக்சர்ஸ் கைவசம் வந்த பிறகு ஹீரோயின்கள் மாற்றப்பட்டுள்ளனர்.
ஒருவேளை முதலில் தேர்வு செய்யப்பட்ட ஹீரோயின்கள் இப்படத்தில் நடித்திருந்தால் படம் இந்த அளவுக்கு வரவேற்பு பெற்று இருக்குமா என்பது சந்தேகம்தான். இதை அறிந்த ரசிகர்கள் கடைசி நேரத்தில் நடிகைகளை மாற்றியதால் திருச்சிற்றம்பலம் படம் தப்பித்து விட்டதாக கூறி வருகின்றனர்.