• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பெண்கள் இடையே மோதல் குறித்து அறந்தாங்கி நிஷா கண்டனம்

BySeenu

Sep 27, 2024

பெண்ணை தயவு செய்து இழிவாக பேச வேண்டாம். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பெண்கள் இடையே மோதல் குறித்து அறந்தாங்கி நிஷா கண்டனம் தெரிவித்துள்ளார்.

பெண்களிடம் கரண்டியை புடுங்கிவிட்டு புத்தகத்தை கொடுத்து பாருங்கள் என பெரியார் சொன்னது போல் இன்று பெண்கள் தான் அதிகம் மேடை ஏறுகின்றனர் என நகைச்சுவையாளரும் நடிகையுமான அறந்தாங்கி நிஷா கோவையில் தெரிவித்துள்ளார்.
கோவை காளபட்டி பகுதியில் நடைபெற்ற கே.ஜி.எஃப் கண்காட்சி மற்றும் ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தனியார் தொலைக்காட்சியின் நகைச்சுவையாளரும், நடிகையுமான அறந்தாங்கி நிஷா கலந்து கொண்டு மேடையில் மாணவ மாணவிகளுடன் இணைந்து நடனமாடி அசத்தினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அறந்தாங்கி நிஷா,பட்டிமன்றங்களில் தமிழை ரசிக்க கூடிய மண் என்றால் கொங்கு மண் மட்டும் தான். அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்று முன்பு சொல்வார்கள், இப்போதெல்லாம் பெண்களால் தான் பலரின் வீடுகளில் அடுப்புகள் எரிகின்றது. கரண்டியை புடுங்கி விட்டு புத்தகத்தை கொடுத்துப்பாருங்கள். அப்பொழுதுதான் பெண்களின் திறமைகள் வெளிவரும் என்று பெரியார் சொன்னார். அதே போல் தற்போது ஆண்களை விட பெண்கள்தான் அதிகமாக மேடையில் ஏறி வருகின்றனர். ஒவ்வொருவரின் பெண்கள் வெற்றிக்கு பின்பு ஆண்கள் இருக்கின்றனர். இந்த மேடை எனக்கு ரசிகர்கள் எனக்கு கொடுத்தது தான் என தெரிவித்தார். தற்போது திரைப்படங்களில் சின்ன, சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றேன். நல்ல ஒரு நகைச்சுவை ரோல் கிடைத்தால் சந்தோசம். கோவை சரளாவிற்கு பின்பு நீங்கள் தான் வரவேண்டும் என எல்லோரும் என்னிடம் தெரிவிக்கின்றனர். அதற்காக காத்திருக்கின்றேன்.
சுசீந்திரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ள வள்ளிமயில் எனும் நகைச்சுவை ரோலாக நடித்துள்ளேன். இந்த படம் திறக்க வந்தால் மக்களிடத்தில் நல்ல இடம் பெறுவேன். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மணிமேகலை பிரியங்கா சண்டை தொடர்பாக பேசிய அறந்தாங்கி நிஷா, அங்கே என்ன நடந்தது என்பது எனக்கு தெரியாது. பெண்களுக்கு என்ன நடந்தாலும் அந்த இடத்தில் நான் இருப்பேன். இதற்கு ஒரு பெண்ணாக நான் கண்டனம் தெரிவிக்கின்றேன். ஒரு பெண்ணை தயவு செய்து இழிவாக பேச வேண்டாம் என தெரிவித்தார்.