இ பாஸ் நடைமுறையால் வெளி மாநில,மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்கள் இ பாஸ் பெற்றிருந்தால் மட்டுமே நீலகிரி மாவட்டத்திற்குள் அனுமதி அளிக்கப்பட்டு வரும் நிலையில், இதிலிருந்து டிஎன்.43 என்ற உள்ளூர் பதிவு எண் கொண்ட வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் காஷ்மீரில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்குப் பின் உள்ளூர் வெளியூர் என அனைத்து வாகனங்களையும் நீலகிரியில் உள்ள 16 செக்போஸ்ட்களில் காவல் துறையினர் சோதனைக்குப்பின்னரே, நீலகிரி மாவட்டத்திற்குள் அனுமதித்து வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் சுற்றுலா மாவட்டம் என்பதாலும்,குடியரசு துணைத் தலைவர் மற்றும்,ஆளுநர் 25,26 ம் தேதி துணைவேந்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளதாலும் மாவட்ட காவல் துறை கண்காணிப்பு பணியினை தீவிரப்படுத்தியுள்ளனர்.