• Thu. Dec 11th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

கலைஞர் போன்றவர் நிகில் முருகன்: இயக்குனர் அமீர் பாராட்டு!

Byஜெ.துரை

Aug 28, 2024

ARTUPTRIANGLES FILM KAMPANY சார்பில் தயாராகி வரும் திரைப்படம் ‘கெவி’. இயக்குநர் தமிழ் தயாளன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் அறிமுக நாயகன் ஆதவன் கதாநாயகனாக நடிக்க, ‘டூ லெட்’, ‘மண்டேலா’ புகழ் ஷீலா கதாநாயகியாக நடித்துள்ளார்.

விஜய் டிவி ஜாக்குலின், சார்லஸ் வினோத், சிதம்பரம், தர்மதுரை ஜீவா, விவேக் மோகன், உமர் பரூக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பாலசுப்பிரமணியன் ஜி இசையமைத்துள்ள இந்தப்படத்தில் கவிப்பேரரசு வைரமுத்து பாடல் எழுதியுள்ளார். ஒரு சிறப்பு பாடலை தேனிசைத் தென்றல் தேவா பாடியுள்ளார். ஜெகன் ஜெயசூர்யா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

கொடைக்கானல் மலைப்பகுதியில் அமைந்துள்ள ஒரு கிராமத்தைச் சுற்றி, அந்த பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களின் வாழ்க்கையை மையப்படுத்தி நிஜமான சம்பவங்களின் பின்னணியில் இந்தப்படம் உருவாகியுள்ளது.

‘கெவி’ படத்தை ரசிகர்களிடம் அறிமுகப்படுத்தும் விழா, படம் குறித்த அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக வருகை இயக்குநர் அமீர் மற்றும் திரைப்பட மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

படத்தை குறிக்கும் டோலியை அமீர் வெளியிட நிகில் முருகன் பெற்றுக் கொண்டார்.

இந் நிகழ்வில் அமீர் பேசும் போது ……

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட நிகில் முருகன் மற்றவர்கள் பேசும்போது அதை குறிப்பெடுத்து அதை வைத்துக் கொண்டு பேசினார்.

இப்படி பேசுவது முன்னாள் முதல்வர் கலைஞர்தான். நிகில் பேசும்போது அவர்தான் என் நினைவுக்கு வந்தார். அப்படி பேசுவதற்கும் தனி திறமை வேண்டும். அது நிகில் முருகனிடம் இருக்கிறது என்றார்.