• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

புதிய சார் பதிவாளர் அலுவலக கட்டிடம்

ByN.Ravi

Sep 16, 2024

ரூபாய் 2 . 25 கோடி மதிப்பீட்டில் செட்டிக்குளம் சார்பதிவாளர் புதிய அலுவலகம் கட்டும் பணிகளை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி, தொடங்கி வைத்தார்.
மதுரை மாவட்டம், வடகக்கு வட்டம் செட்டிக்குளம் ஊராட்சியில், செட்டிக்குளம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு ரூ.2 . 25 கோடி மதிப்பீட்டில் பணிகளை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, தொடங்கி வைத்தார்.
பணிகளை தொடங்கி வைத்து , வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, தெரிவித்ததாவது:-
பத்திர பதிவுத்துறையில், சார்பதிவாளர் அலுவலகத்திற்கு பதிவு செய்ய வரும் பொது
மக்களுக்கு சிரமம் இல்லாமலும், கூட்ட நெரிசல் இல்லாமலும், இருப்பதற்கு நிர்வாக
ரீதியாக சார்பதிவாளர் அலுவலகம் பிரிக்கப்பட்டது. இதில், புதிதாக பிரிக்கப்பட்ட சார்
பதிவாளர் அலுவலகங்கள் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகின்றன. புதிய சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு, புதிய கட்டிடம் கட்டி, பத்திர பதிவு செய்ய வரும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில், இன்று (16.09.2024) செட்டிக்குளம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு ரூ. 2 . 25 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.
4,000 சதுர அடியில் அமைய உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில், பதிவு வைப்பறை, கணினி அறை, காத்திருப்போர் அறை உள்ளிட்ட வசதிகள் இடம் பெற்றுள்ளன.
வடக்கு வட்டத்தில் உள்ள 33 கிராமங்கள் செட்டிக்குளம் சார்பதிவாளர் அலுவலகத்தில் இடம் பெற்றுள்ளன. மேலும், வாடகை கட்டிடத்தில் இயங்கும் சார்பதிவாளர் அலுவலகம் அனைத்தும் புதிய கட்டிடம் கட்டுவதற்கு இயங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்
பட்டுள்ளது என , வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார்கள்.
இந்நிகழ்ச்சியில், பத்திரபதிவு துணை தலைவர் ரவீந்திர நாத், துணை பதிவாளர் பெரியசாமி, சார்பதிவாளர் கதிரேசன், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் செல்வராஜன், கண்காணிப்பு பொறியாளர் அய்யாசாமி ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.