• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கோவையில் புதிய தொழிற்சாலை திறப்பு..,

BySeenu

Jun 5, 2025

தமிழ்நாடு இந்தியாவில் வெளிநாட்டு முதலீடுகளை பெற்று தொழில் தொடங்குவதில் முன்னணி மாநிலமாக விளங்குவதாகவும் தமிழக முதல்வர் எண்ணற்ற திட்டங்களை அதற்காக கொண்டு வருவதாகவும் அமைச்சர் டிஆர்பி ராஜா பெருமிதம் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே செயல்பட்டு வரும் இஜட் ஃப் என்ற தனியார் தொழில்நுட்ப நிறுவனத்தின் கட்டுமான மற்றும் ரயில்வே துறைகளுக்கான உதிரி பாகங்கள் தயாரிக்கும் புதிய உற்பத்தி ஆலை இன்று திறக்கப்பட்டது.

இந்த திறப்பு விழாவில் தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா சென்னையில் இருந்து காணொலிக் காட்சி மூலம் பங்கேற்று விழாவில் பேசிய அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா,ஜெர்மன் மற்றும் தமிழ்நாடு தொழில் துறைகள் இணைந்து உயர்தர உற்பத்திப் பொருட்களை உருவாக்குவதிலும், புதிய முதலீடுகளை ஈர்ப்பதிலும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள், ஜெர்மனிக்குச் சென்று தமிழ்நாட்டிற்கு மேலும் பல முதலீடுகளை ஈர்க்குமாறு எனக்கு உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் நான் விரைவில் ஜெர்மனிக்குச் செல்லவுள்ளேன், என்று தெரிவித்தார்.

மேலும் அவர், உலகத்தரம் வாய்ந்த உற்பத்திப் பொருட்களை உருவாக்குவதற்கு கோவை மாவட்டத்தைத் தேர்ந்தெடுத்தது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது மட்டுமல்லாமல், பெருமைக்குரியதாகவும் உள்ளது. தமிழ்நாட்டில் மட்டுமே நாட்டின் 43 சதவீத உழைக்கும் சக்தி உள்ளது. தமிழ்நாட்டில் உலகத்தரம் வாய்ந்த தொழில் உற்பத்தியை மேற்கொள்வதற்காக தமிழக முதல்வர் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார், என்று தெரிவித்தார்.