மதுரை மாவட்டம் கப்பலூர் நான்கு வழி சாலை திருமங்கலத்தில் இருந்து திருப்பரங்குன்றம் நோக்கி புத்தம் புதிய எலக்ட்ரிக் ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது அப்பொழுது கப்பலூர் காலனி பேருந்து நிறுத்தத்தை அடுத்து சில மீட்டர் தூரத்தில் ஆட்டோ சாலையின் தடுப்பு மீது மோதி தலைக்குப்புற கவிழ்ந்தது.

இதில் இரண்டு பேர் அமர்ந்து பயணித்து வந்தார்கள் இதில் ஓட்டுநருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அக்கம் பக்கத்தினர் தேசிய நெடுஞ்சாலை அவசரகால உறுதிக்கு தகவல் கொடுக்கப்பட்டு உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தேசிய நெடுஞ்சாலைத்துறை அவசர கால ஊர்தி படுகாயம் அடைந்திருந்த ஆட்டோ ஓட்டுனர் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் குறித்து திருமங்கலம் டவுன் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புத்தம் புதிய எலக்ட்ரிக் ஆட்டோ சாலையில் தலை குப்புற கவிழ்ந்தது. பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஓட்டுநர் மதுபோதையில் இருந்ததாக தெரிய வருகிறது நல்வாய்ப்பாக பின்னால் எந்த ஒரு வாகனமும் வரவில்லை.