காரைக்காலில் மூன்று மாதமாக ஆட்சியர் இல்லாத நிலையில் தற்போது புதிய மாவட்ட ஆட்சியராக ரவி பிரகாஷ் IAS பதவியேற்றார். அதிகாரிகளிடம் பிரச்சனை கூற வரும் பொதுமக்களுக்கு அதிகாரிகளே பிரச்சினையாக இருக்க கூடாது என ஆட்சியர் அறிவுறுத்தினார். எந்நேரமும் பொதுமக்கள் கலெக்டரை சந்திக்கலாம் என புதிய ஆட்சியர் அழைப்பு விடுத்தார்.
