கன்னியாகுமரி ஒரு சர்வதேச சுற்றுலா பகுதி. இங்கு தினம் பன்மொழி, நாகரீகம்,பண்பாடு உடைய பல்வேறு நிலையினர் சுற்றுலா வரும் பகுதி ஆகும்.
தங்கும் விடுதிகளில் தினம் வந்து தங்கும் சுற்றுலா பயணிகள் பற்றிய தகவல்கள் சேகரிக்க புதிய மொபைல் ஆப் பற்றிய காவல்துறை அறிமுகப்படுத்தி உள்ளனர்.

கன்னியாகுமரியில் சின்னதும்,பெரியது,நட்சத்திர விடுதிகள், ரிசார்ட் என சுற்றுலா பயணிகளின் பொருளாதார அடிப்படையிலான தங்கும் விடுதிகள் உள்ளது.
சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதிகளில் தங்கும் சுற்றுலா பயணிகளின் முகவரியை இதுவரை பதிவேடுகளில் எழுதிய நிலையுடன் கூடுதலாக இனி கை முறையாக பதிவு செய்யாது.புதிய மொபைல் ஆப் மூலம் இந்த தகவல்கள் நேரடியாக காவல்துறையின் கண் காணிப் பில் இருக்கும் என அதிகாரி தெரிவித்தார்.
அண்மையில், City Visitor Information Regard Managing System (CVIRMS) என்ற புதிய மொபைல் ஆப்பை கன்னியாகுமரி காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. கன்னியாகுமரிக்கு தினமும் 5,000 முதல்10,000வரை பன்மொழி சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.
இவர்களின் அடையாளங்கள் பதிவு செய்யும் முறை தற்போது கையெழுத்து பதிவு தங்கும் விடுதியின் பதிவேட்டில் மட்டுமே எழுதப்படுகிறது. விடுதியில் தங்கும் சுற்றுலா பயணிகள் பற்றிய தகவல்கள் பாதுகாப்பாக காவல்துறையிடம் இருக்க வேண்டும் என்பதால், இந்த புதிய மொபைல் ஆப் அமல்படுத்தப்படுகிறது.
கன்னியாகுமரியில் உள்ள 100_க்கும் அதிகமான தங்கும் விடுதிகள், நட்சத்திர மற்றும் ரிசார்ட்களில் இந்த புதிய ஆப்பை உடனடியாக நிறுவ வேண்டும் என கன்னியாகுமரி துணை கண்காணிப்பாளர் மகேஷ் குமார். தங்கும் விடுதி உரிமையாளர்களின் ஆலோசனை கூட்டத்தில் தெரிவித்தார்.
பெங்களூரை சேர்ந்த ஐ.டி. நிறுவன பொறியாளர் விக்னேஷ்,பிரேம் குமார் ஆகியோர் புதிய ஆப்பை எவ்வாறு பயன் படுத்துவது என்பது குறித்து தங்கும் விடுதி உரிமையாளர்களின் கூட்டத்தில் விளக்கமளித்தனர்.