• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மத்தியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி வந்தால் தமிழ்நாட்டில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும்…

ByKalamegam Viswanathan

Aug 25, 2023

அதிமுக மாநாட்டு வந்தவர்களுக்கு உணவு தர முடியாத இவர்கள் மற்றவர்கள் மீது குறை சொல்வதை நிறுத்த வேண்டும்.

மாணிக்கம் தாகூர் எம்பி பேட்டி,

மத்தியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி வந்தால் தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.
திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சூரக்குளம் கிராமத்தில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் தொடக்க விழா இன்று நடைபெற்றது. விழாவிற்கு ஊராட்சி ஒன்றிய தலைவர் வேட்டையன் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது,

வரலாற்று சிறப்புமிக்க ஒரு திட்டத்தை இன்று தமிழக முதல்வர் தொடங்கி வைத்துள்ளார். இதனை விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சூரக்குளத்தில் தொடங்கி வைப்பதை நான் பெருமையாக கருதுகிறேன்.இது இந்தியாவின் முன்னோடி திட்டமாக உள்ளது. உன்னதமான நோக்கத்தில் உருவாக்கப்பட்ட இந்த திட்டம் மிகப்பெரிய வெற்றி அடைய வேண்டும் இதற்கு உள்ளாட்சி பிரதிநிதிகள் உதவிட வேண்டும்.

நீதிமன்றம் ஒரு தீர்ப்பு வழங்கிய பிறகு அதில் பாதிக்கப்பட்டவர்கள் மேல் முறையீடு செய்வது வழக்கம். ஆனால் தாமாக வந்து திமுக அமைச்சர்கள் மீது உள்ள குற்றச்சாட்டை விசாரிக்கும் அந்த நீதி அரசர் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது உள்ள குற்றச்சாட்டுகள் மீதும் தாமாக வந்து விசாரணை செய்வதிலும் வேகத்தை காட்ட வேண்டும்.

நீதி என்பது அனைவருக்கும் ஆனதாக இருக்க வேண்டும். ஒரு சாரருக்கு மட்டும் இருக்கக் கூடாது. அதிமுகவினர் ஆளுங்கட்சியினரை ஏதாவது வழி சொல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர் வளையங்குளத்தில் நடைபெற்ற மாநாட்டில் வந்தவர்களுக்கு உணவு கூட அளிக்க முடியாத என் நிலையில் தான் உள்ளனர். இதனால்தான் மாநாட்டில் அக்கட்சியின் போது செயலாளரை எடப்பாடி பழனிச்சாமி முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி. உதயகுமார், ராஜன் செல்லப்பா போன்றவர்களுக்கு நன்றி கூட தெரிவிக்காமல் சென்று விட்டார்.

தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீண்டும் ராகுல் காந்தி பிரதமர் ஆனால் தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் எனக் கூறியதை வரவேற்கிறேன்.

மீண்டும் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும். அப்போது தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் அந்தந்த மாநிலங்களின் கோரிக்கையின் அடிப்படையிலேயே மத்திய அரசின் திட்டங்கள் இருக்கும் தமிழக அரசு நிராகரிக்கும் எந்த திட்டங்களையும் ராகுல் காந்தி தலைமையிலான அரசு தமிழகத்தில் திணிக்காது இதை முன்னெடுத்து இருக்கின்ற தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் எனகூறினார். நிகழ்ச்சியில் அவருடன் ஊராட்சி ஒன்றிய தலைவர் வேட்டையன், தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பாண்டியன் மாநில பொதுக்குழு உறுப்பினர் எம்.பி. .எஸ்.பழனிகுமார், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் சுப்பிரமணியன், நிர்வாகிகள் சத்யன், வித்யாபதி உட்பட பலர் கலந்து கொண்டன.