• Sat. Jan 10th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

சிவகாசி அருகே மாற்றுத்திறனாளிகள் பள்ளிக்கு ரூ. 9 லட்சம் செலவில் சாலை வசதி

ByKalamegam Viswanathan

Mar 30, 2023

சிவகாசி அருகே மாற்றுத்திறனாளிகள் பள்ளிக்கு ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் சார்பாக சாலை வசதி அமைத்து கொடுக்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள சாட்சியாபுரம் பகுதியில்,சி.எஸ்.ஐ. மாற்றுத்திறனாளிகள் மற்றும் மனவளர்ச்சி குறையுடையோர் பள்ளி, எல்வின் நிலையம் உள்ளது.

இந்தப்பள்ளிக்கு, ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் சமூக கூட்டாண்மை பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ், சுமார் 9 லட்சம் ரூபாய் செலவில் பேவர்பிளாக் சாலை அமைத்து கொடுக்கப்பட்டது. இதற்கான விழா காலை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ராம்கோ நிறுவன கணக்கு மற்றும் நிர்வாக உதவி தலைவர் மணிகண்டன், எல்வின் நிலைய நிர்வாகி தயாளன் பர்னபாஸ், தலைமை ஆசிரியர் ஜோசப்தினகரன், ஆயர் ஸ்டீபன்வேதராஜ், பொறியாளர் வேல்முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை எல்வின் நிலைய நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.