• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

ஈஷாவில் நவராத்திரி திருவிழா!

ByKalamegam Viswanathan

Oct 9, 2024

ஈஷாவில் கோலாகலமாக நடைப்பெற்று வரும் நவராத்திரி திருவிழா ஆராவாரத்துடன் நடைபெற்ற ஆதிவாசி நடன நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவை ஈஷா யோகா மையத்தில் ‘நவராத்திரி திருவிழா’ கடந்த 3-ஆம் தேதி கோலாகலமாக துவங்கியது. ஈஷா நவராத்திரி விழாவில் கடந்த 6-ஆம் தேதி ஆதிவாசி சகலகலா குழுவினரின் ‘தெலுங்கானா பழங்குடியினரின் நடன நிகழ்ச்சி’ நடைபெற்றது.

ஈஷாவில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நவராத்திரி நாட்களில் தினமும் மாலை 6 மணி அளவில், ஈஷா மைய வளாகத்தில் அமைந்துள்ள சூர்ய குண்டம் மண்டபத்தில் பலவேறு பாரத பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைப்பெற்று வருகின்றன. இதில் தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த இசை மற்றும் நடனக் கலைஞர்கள் பங்கேற்று வருகின்றனர்.

அந்த வகையில் நவராத்திரி கொண்டாட்டத்தின் 4-ஆம் நாளில் புகழ்பெற்ற ஆதிவாசி சகலகலா குழுவினரின் ‘தெலுங்கானா பழங்குடியினர்’ நடன நிகழ்ச்சியை வழங்கினர். இக்குழுவின் தலைவர் திரு. ஶ்ரீதர் அவர்கள் இச்சோடா பகுதியின் துபார்பேட் கிராமத்தை சேர்ந்தவர். இவருடைய கலைக்குழு டெல்லி சர்வதேச கலை விழாவில் தெலுங்கானா சார்பில் ‘திம்சா குஸ்ஸாடி’ நிகழ்ச்சியை வழங்கியது. மேலும் இவர் ‘ஆதிவாசி கலா ஜாதரா’ நிகழ்ச்சியின் மூலம் நூற்றுக்கணக்கான பழங்குடியின கலைஞர்களை முன்னிலைக்கு கொண்டு வந்தவர் . 2022 இல் கிரியேட்டிவ் ஆர்ட்டிஸ்ட்க்கான் நந்தி விருது பெற்றவர். இவரின் குழு, நடத்திய நடன நிகழ்ச்சி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

அதோடு நவராத்திரி விழா கொண்டாடப்படும் ஒன்பது நாட்களும் லிங்கபைரவி தேவி மூன்று விதமான அபிஷேகத்தில் தோன்றுவார். முதல் மூன்று நாட்கள் குங்கம அபிஷேகத்தில் தரிசனம் நல்கிய தேவி, இனி வரும் மூன்று நாட்கள் மஞ்சள் அபிஷேகத்தில் அருள்பாலிப்பார். சிறப்பு கொண்டாட்டங்களை ஒட்டி லிங்கபைரவி தேவி கோவில் இரவு 10.20 வரை திறந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

நவராத்திரியின் ஐந்தாம் நாளான நேற்று (07/10/2024) ‘வினயா’ குழுவினர் கிளாசிக்கல் இசை நிகழ்ச்சி நடைப்பெற்றது. மேலும் நவராத்திரி நாட்களில் தினமும் லிங்க பைரவி தேவியின் மகா ஆரத்தி நடைபெறுகிறது.