• Sat. Jan 10th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தேசிய ஊட்டச்சத்து வாரம்

By

Aug 29, 2021 , ,

உணவால், ஒரு தலைமுறையையே வலிமையானதாக மாற்ற முடியும். இதை வலியுறுத்தியே, இந்தியாவில் ஒவ்லொரு வருடமும், செப்டம்பர் மாதம் முதல் வாரத்தின் (1-ந் தேதி முதன் 7-ந் தேதி வரை) தேசிய ஊட்டச்சத்து வாரம் கொண்டாடப்படுகிறது.

உலக அளவில் ஐந்து வயதுக்குட்பட்ட 149.2 மில்லியன் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு, அதிக எடை மற்றும் குறைபான வளர்ச்சி போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 15 சதவீத குழந்தைகள் ஊட்டச்சத்து மற்றும் வளர்ச்சி குறைபாடு பிரச்சினையை எதிர்கொள்கிறார்கள்.

இதை போக்குவதற்காக, மக்களிடம் உணவின் முக்கியத்துவத்தையும், நல்வாழ்வு மற்றும் உடல் நலத்திற்குத் தேயையான ஊட்டச்சத்துக்கள் பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதற்கு அரசு திட்டமிட்டது. இதன் காரணாமாக மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின், உணவு மற்றும் ஊட்டச்சத்து வாரியத்தால் தொடங்கப்பட்ட நிகழ்வே , “தேசிய ஊட்டச்சத்து வாரம்”

“ஆரம்பத்திலிருந்தே சரியான உணவனித்தல்” என்பதே இந்த வருடத்துக்கான கருப்பொருள். பிறந்த குழந்தைகளுக்கும், இளம் குழந்தைகளுக்கும் அவர்களின் சிறுவயதில் இருந்தே சரியான ஊட்டச்சத்துடன் கூடிய உணவு அளிக்க வேண்டும். இது அவர்கள் ஊட்டச்சத்து குறைபாடின்றி ஆரோக்கியமாக வளர உதவும். ஊட்டச்சத்து குறைபாட்டால் ஏற்படும் அறிவுத் திறன் குறைவு, உடல் வளர்ச்சி குறைவு. நோய்த்தடுப்பு ஆற்றல் குறைவு போன்றவற்றை குணப்படுத்தவும், வாழ்வியல் நோய்கள் ஏற்படாமல் நடுக்கவும் வழிவகை செய்யும். எனவே குழந்தைகளுக்குக் கொடுக்கும் ஊட்டசத்துள்ள உணவில், அவர்களின் எதிர்காலம் அடங்கியிருக்கிறது என்பதை நினைவில் கொண்டு செயல்படுவோம்.