போல் வால்ட் போட்டியில் தங்கம் வென்று சுகுணா ரிப் வி பள்ளி மாணவி தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டார்.
மாநில அளவில் நடைபெற்ற போல் வால்ட் எனும் கம்பு ஊன்றி உயரம் தாண்டுதல் போட்டியில் கோவை சுகுணா ராக் வி பள்ளியில் பயிலும் மாணவி அஸ்வினி தங்கம் வென்று அசத்தல்.
கோவை லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்த மாணவி அஸ்வினி. காந்திபுரம் டாக்டர்ஸ் காலனி பகுதியில் சுகுணா ரிப் வி பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வரும் மாணவி அஸ்வினி அண்மையில் ஈரோட்டில் நடைபெற்ற மாநில அளவிலான தடகள போட்டியில் கலந்து கொண்டார்.
இதில் போல் வால்ட் எனும் கம்பு ஊன்றி உயரம் தாண்டுதல் போட்டியில் கலந்து கொண்ட அவர், 2.30 மீட்டர் உயரம் தாண்டி முதலிடம் பிடித்து தங்கம் வென்றார்.
அடுத்து லக்னோவில் நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள உள்ள மாணவிக்கு பள்ளி நிர்வாகம் பாராட்டு விழா நடைபெற்றது.

இதில் பள்ளியின் தலைவர் லட்சுமி நாராயண சாமி, தாளாளர் சுகுணா மற்றும் சாந்தினி அனீஷ் இயக்குனர் மற்றும் முதல்வர் ஆண்டனி ராஜ், அலுவலக நிர்வாகி உமாராணி, தலைமையாசிரியை லீணா உள்ளிட்டோர் மாணவிக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
இதில் மாணவி செய்தியாளர்களிடம் பேசுகையில், தமது இந்த சாதனைக்கு உறு துணையாக இருந்த தமது பெற்றோர் மற்றும் பள்ளி நிர்வாகம் ஆசிரியர்கள், உடற்பயிற்சி ஆசிரியர்களுக்கு நன்றிகளை தெரிவிப்பதாக கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர்,போல் வால்ட் போன்ற போட்டிகளில் பயன்படுத்தும் கம்புகளை எடுத்து செல்ல சில பேருந்துகளில் அனுமதிப்பதில்லை என கூறிய அவர், விளையாட்டு உபகரணங்களை கொண்டு செல்ல தனி அனுமதி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.