• Tue. Apr 22nd, 2025

தேசிய அளவிலான சைக்கிளிங் போட்டி கோவை புதூர் ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் சாதனை

BySeenu

Apr 4, 2024

ஹரியானாவில் நடைபெற்ற தேசிய அளவிலான சைக்கிளிங் போட்டியில் 4 தங்கம் உட்பட ஆறு பதக்கங்கள் வென்று கோவை திரும்பிய ஆஸ்ரம் பள்ளி மாணவ, ,மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு

அண்மையில் ஹரியானா மாநிலத்தில் தேசிய அளவிலான மவுண்டன் சைக்கிளிங் எனும் மலை வழி சாலை சைக்கிள் பந்தயம் நடைபெற்றது. தேசிய அளவில் நடைபெற்ற இதில் டில்லி, கேரளா, மகாராஷ்டிரா, உத்திரபிதேசம், இராஜஸ்தான் என இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுமார் 500 க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் கோவையில் இருந்து தமிழகம் அணி சார்பாக கோவைபுதூ்ர் ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளி மாணவி ஹாசினி 14 வயதிற்குட்பட்ட பிரிவில் 2 தங்கப்பதக்கமும், அதே பள்ளியில் பயிலும் மாணவர்கள் பிரிவில் 9 ம் வகுப்பு மாணவன் பிரனேஷ் 2 தங்கப்பதக்கங்களும், 16 வயதிற்குட்பட்ட பிரிவில் 11 ம் வகுப்பு மாணவி சௌபர்ணிகா 2 வெண்கல பதக்கங்களும் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். இந்நிலையில், பதக்கம் வென்று கோவை திரும்பிய மாணவர்களுக்கு ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சாதனை படைத்த மாணவர்களை ஆஸ்ரம் பள்ளியின் தாளாளர் தேவேந்திரன், நிர்வாக இயக்குனர் .கௌரி உதயேந்திரன் மற்றும் கோவை சைக்கிளிங் அசோசியேஷன் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வாழ்த்தினர். இந்த போட்டியில் தமிழ்நாடு அணி சப் ஜூனியர் பிரிவில் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.