மதுரை காளவாசல் தேனி தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இதில் முடக்கு சாலை பகுதியில் கடந்த ஓராண்டுக்கு முன்பாக புதிய பாலம் திறக்கப்பட்டது. பாலம் திறந்ததிலிருந்து தொடர் விபத்துகளை சந்தித்து வருகிறது. பாலத்தின் போதிய அளவு ஒளிரும் விளக்கு இல்லாததும் வேகத்தடை அமைக்காததும், விபத்துக்கு காரணமாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மாலை சுமார் 5 மணி அளவில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மேலாளராக பணியாற்றி வந்த கருணாநிதி என்பவர் பாலத்தில் இருந்து கடக்க முயன்ற போது, அப்பொழுது வேகமாக வந்து இருசக்கர வாகனம் கருணாநிதி மீது வேகமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும் நேற்று இரவு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த நிலையில் இன்று அதிகாலை ஓசூரில் இருந்து திருநெல்வேலி சென்று கொண்டிருந்த அரசு விரைவு போக்குவரத்து கழக பேருதானது பாலத்தில் வந்து கொண்டிருந்தது.

அப்பொழுது இரண்டு ஓட்டுனர்கள் இருந்த நிலையில் ஓசூரில் இருந்து சேலம் வரை ஒரு ஓட்டுனரும் சேலத்தில் இருந்து தென்காசி மாவட்டத்தை சேர்ந்த ராஜ செல்வம் மதுரை வரை ஒரு ஓட்டுநரும் ஓட்டி வந்துள்ளனர். மதுரை நகருக்குள் தூக்க கலக்கத்தில் இருந்ததாக தெரிய வருகிறது. வரும்பொழுது முடக்கு சாலை பாலத்தில் ஏறும் பொழுது எதிர்பாராத விதமாக பாலத்தின் சென்டர் மீடியரில் வாகனம் மோதி நின்றது. நல்வாய்ப்பாக யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை. சம்பவ குறித்து தகவல் அறிந்த திடீர் நகர் போக்குவரத்து புலனாக போலீசார் அரசு விரைவு போக்குவரத்து கழக தேசிய நெடுஞ்சாலைத்துறை மற்றும் போக்குவரத்து போலீசார் இணைந்து விபத்தில் சிக்கிய பேருந்தை அகற்றும் வேலையில் ஈடுபட்டனர். துரிதமாக செயல்பட்டு சாலையில் சிந்தியிருந்த கண்ணாடி துகள்கள் மற்றும் ஆயில்கள் ஆகியவை மணல் கொண்டு மூடி அகற்றினர். இதனால் மேலும் விபத்துக்கள் நடப்பது தவிர்க்கப்பட்டது. தொடர்ந்து இதுபோன்ற விபத்துக்கள் அப்பாலத்தில் நடப்பதால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பாலத்தில் இனி விபத்துக்கள் நடக்காமல் இருப்பதற்கு ஆய்வு மேற்கொண்டு விபத்துக்கள் நடக்காமல் இருப்பதற்கு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை அனைவரும் கோரிக்கையாக உள்ளது. மேலும் விபத்துக்கள் நடக்காமல் இருப்பதற்கு தேசிய நெடுஞ்சாலை துறை உரிய நடவடிக்கை எடுக்குமா.
