கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நாஞ்சில் நாடு என்னும் சிறப்புப் பெயரையும் பெற்ற மாவட்டம். குமரி மாவட்டத்தில் நெல்,தென்னை,மீன்பிடித்தல்,வாழை, ரப்பர் பிரதான விவசாயங்கள். நெல்லுக்கு அடுத்த இடத்தை தென்னை விவசாயம் பெற்றுள்ளது.

தென்னை மரங்கள் நிறைந்த குமரி மாவட்டத்தில். கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தா கேந்திரா வளாகத்தில் தேசிய தென்னை விவசாய கருத்தரங்கம் நடைபெற்றது.

கருத்தரங்கிற்கு பாரதிய கிசான் சங்கத்தின் மாநில செயலர் முருகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில். குமரி மாவட்ட தலைவர் ராஜேஷ்குமார், மாவட்ட துணை செயலாளர் கண்ணன், கருத்தரங்கில் அகில இந்திய தென்னை வாரியம் தலைவர் சுபநாகராஜன், பொதுச்செயலாளர் மோகினி மோகன் மிஸ்ரா, மாநில பாரதிய கிசான் சங்கத்தின் தலைவர் பார்த்த சாரதி மற்றும் மாநில நிர்வாகிகள் பங்கேற்ற நிகழ்வில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் மற்றும் தீர்மானங்கள்.

இந்தியா முழுவதும் அனைத்து மத முக்கிய விழாக்கள் ஆன பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ்,யப்பான் போன்ற பண்டிகை காலங்களில், அரசின்
நியாய விலை கடைகளில் 1_லிட்டர் தேங்காய் எண்ணெய்,3_தேங்காய்களை இலவசமாக வழங்கவேண்டும்.

உணவு எண்ணெயில் கலப்படம் செய்வதை தடுக்க சட்டம் இயற்றவேண்டும். 2023_ம் ஆண்டை சிறு தானிய ஆண்டாக அறிவித்தது போல் 2027_ம் ஆண்டினை தேங்காய் ஆண்டாக அறிவிக்க வேண்டும். இதன் மூலம் உலகச் சந்தையில் தேங்காய் விற்பனையை அதிகரிக்க முடியும். தேங்காயின் ஆதரவு விலையை கிலோவுக்கு ரூ.200.00 என உயர்த்திட வேண்டும் என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிகழ்ச்சியின் நிறைவாக, குமரி மாவட்ட துணை தலைவர் ராமதாஸ் நன்றி கூறினார்.





