மதுரை மாவட்டம் பந்தல் சாகுபடி முறையில் காய்கறி விவசாயம் பயனாளிகளுக்கு உறுதுணையாக விளங்கும் தோட்டக்கலைத்துறையின்தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம்.
தமிழ்நாடு அரசு வேளாண் உற்பத்தியை பெருக்கிடவும், விவசாயிகளின் நலனை உறுதி செய்திடும் வகையிலும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள்துறையின் மூலம் விவசாயிகளுக்கு பல்வேறு மானியத் திட்டங்கள் 2024-2025-ஆம் ஆண்டில் செயல்படுத்தப்படுகிறது.
மதுரை மாவட்டத்தில், உள்ள 13 வட்டாரங்களிலும் TNHORTNET இணையதளம் மற்றும் UZHAVAN செயலி மூலமாகவும் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர்கள் அலுவலகம் மூலமாகவும் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம் (NADP) செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் நடப்பு நிதியாண்டில் ரூ.18.00 இலட்சம் செலவில் பல்வேறு பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் முருங்கை பரப்பு விரிவாக்கம் செய்ய ஒரு எக்டருக்கு ரூ.10,000/- மானியமும், செடிவகை காய்களுக்கான நிரந்தர பந்தல் அமைக்க ஒரு எக்டருக்கு ரூ.3,00,000/- இலட்சம் மானியமும் மற்றும் ஒரு எக்டர் வாழைக்கு முட்டுக் கட்டுதலுக்கு ரூ.25,000/- மானியமும் இத்திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது.
தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பந்தல் சாகுபடி செய்து வரும் கிழக்கு ஊராட்சி ஒன்றியம், உலகனேரி கிராமத்தை சேர்ந்த விவசாயிச.மகேஷ் தெரிவித்ததாவது:-
நான் ,மதுரை மாவட்டம், கிழக்கு வட்டாரத்தைச் சேர்ந்த உலகனேரி கிராமத்தில் சுமார் 8 ஏக்கர் தரிசு நிலத்தை பயன்படுத்தி காய்கறி விவசாயம் செய்து வருகிறேன். இதில் 8 முதல் 10 வகையான காய்கறி விவசாயம் செய்து வருகிறேன். குறிப்பாக பந்தல் சாகுபடி முறையில் கோவக்காய், பாகல்,பீர்க்கு,புடல்,சுரைக்காய் என 5 வகையான காய்கறிகள் தொடர்ச்சியாக பயிரிட்டு வருகிறேன். மதுரை கிழக்கு வட்டார தோட்டக்கலைதுறை சார்பாக தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம்2024-2025 (NADP)யில் எனக்கு 0.60 ஏர்ஸ் பந்தல் அமைத்து பயிரிடுவதற்கு மானியமாக ரூ.1,80,000/- தோட்டக்கலைதுறை வழங்கியது.
இதனால் பந்தல் சாகுபடி செய்வதில் எனக்கு பெரிதும் பக்கபலமாக இருந்தது மேலும் பந்தல் காய்கறி பயிரிடுவதால் தொடர்ச்சியாக வருமானம் கிடைக்கிறது. மாறி வரும் காலத்திற்கேற்ப தோட்டக்கலைதுறை மூலமாக 75% மானியத்தில் சொட்டுநீர்பாசனம்
போன்ற நவீன தொழில்நுட்பங்களை எனது தோட்டத்தில், தொடர்ந்து செயல் படுத்துவதன் மூலம் மென்பொறியாளராகிய நான், சிறந்த விவசாயியாகவும் இருப்பது மன நிறைவைத் தருகிறது. பந்தல் சாகுபடி செய்வதால் எனக்கு ஆண்டிற்கு வருமானம் ரூ.3,35,000/- கிடைக்கிறது. இதில் செலவு போக நிகர இலாபமாக ரூ.1,99,000/- கிடைக்கிறது என தெரிவித்தார்.
தேசீய வேளாண் வளர்ச்சி திட்டம்:
