தமிழகத்தில் எம்ஜிஆர் தலைமையில் அமைந்த முதல் அமைச்சரவையில்.
நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற நாஞ்சில் வின்சென்ட். எம்ஜிஆர் அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்த நாஞ்சில் மனோகரனது அமைச்சரவையில் துணை நிதி அமைச்சர் பதவியை கொடுத்து எம்ஜிஆர் முதல்முதலாக அழகு பார்த்தார்.(தமிழக அமைச்சரவையில் அது வரையில் எந்த துறையிலும் துணை அமைச்சர் என்ற பதவி இருந்ததில்லை.)

நாஞ்சில் வின்சென்ட் எம்ஜிஆர்_க்கு அறிமுகமாக காரணமாக இருந்த சம்பவம் சுவாரசியம் ஆனது.
கலைஞர் கருணாநிதி ஆட்சியின் போது. அதிமுக என்ற கட்சி தொடங்கப்பட்ட சில மாதங்களில் நடந்த சட்டமன்றத் தொடரின் போது.
சட்டமன்ற பார்வையாளர்கள் பகுதியில் இருந்து. நாஞ்சில் வின்சென்ட் எம்ஜிஆர்_க்கு ஆதரவாக சிறிய அளவிலான ‘நோட்டீஸ்’ அடித்து பல நூறு பிரதிகளை சட்டமன்ற கூட்டத்தில் வீசினார். அன்றைய நாள் இது ஒரு பரபரப்பான செய்தியாக வெளியானது.
எம்ஜிஆர் காதுக்கும் இந்த செய்தி எட்டியதும்.யார் அந்த இளைஞன் அழைத்து வாருங்கள் என எம்ஜிஆர் சொன்னதுதான். நாஞ்சில் வின்சென்டின் அரசியல் வாழ்வின் முதல் திருப்புமுனை.
இரண்டு முறை நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர். ஒருமுறை ஜெயலலிதா நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக இருந்த சம காலத்தில் நாஞ்சில் வின்சென்டும், நாடாளுமன்ற மேலவை உறுப்பினர்.
ஜெயலலிதா ஆட்சி காலத்தில் கட்சியில் எந்த பெரிய பொறுப்பும் நாஞ்சில் வின்சென்ட் வகிக்காதபோதும். ஜெயலலிதாவின் குமரி மாவட்டம் சுற்றுப்பயணத்தின் போது.
அஞ்சுகிராமம் பகுதியில் ஜெயலலிதாவின் பிரச்சார வாகனத்தின் சற்று தொலைவில், குமரியின் கட்சி முக்கியஸ்தர்கள். சாலையில் சற்று தூரத்தில் அமர்ந்து இருந்தார்கள்.
ஜெயலலிதாவின் அப்போதைய பாதுகாப்பு அதிகாரி சங்கிலியாண்டி தூர்தர்ஷன்,ஹிந்து செய்தியாளர்களை மட்டுமே முதல்வருடன் செய்தி சந்திப்புக்கு அழைத்தார்.
ஜெயலலிதா வாகனத்தில் அமர்ந்திருந்த படி செய்தியாளர்கள் இடம் அங்கே இருப்பது நாஞ்சில் வின்சென்ட் தானே என கேட்டதும். தூர்தர்ஷனின் அன்றைய செய்தியாளர் ஆம் என்று சொன்னார். ஜெயலலிதா நாஞ்சில் வின்சென்டை மட்டும் அவரது வாகனத்தின் அருகில் அழைத்து நலம் விசாரிப்பு பொது வெளியில் நடைபெற்றது.

நாஞ்சில் வின்சென்ட் தற்போது அரசியலில் முழுமையான ஈடுபாடு காட்டாத நிலையிலும் கட்சியின் தொடர்பில் இருந்தார்.
நாஞ்சில் வின்சென்ட் இப்போது நாகர்கோவில் பகுதியில் கல்லூரி, பள்ளி என ஒரு பெரிய கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று (செப்டம்பர்_1)ம் நாள் ஒரு அறிக்கையின் மூலம். கழக அமைப்பு செயலாளராக நாஞ்சில் வின்சென்ட் அறிவித்துள்ளார்.
இது குறித்து அதிமுகவின் தொடக்க கால அனுதாபிகள், அன்றும், இன்றும் பல்வேறு பொறுப்பாளர்களிடம் கேட்ட போது நாஞ்சில் வின்சென்ட் க்கு நல்ல வரவேற்பு இருந்தது.















; ?>)
; ?>)
; ?>)