அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டத்திற்குட்பட்ட நந்தியன் குடிக்காடு கிராமத்தில், ரயில்வே கேட்டு அருகே உள்ள புளியமரத்தில் கதண்டு கூடுகள் அமைந்துள்ளதால், பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தமிழ்ப் பேரரசு கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அக் கட்சியின் மண்டல செயலாளர் முடி மன்னன் மாவட்ட நிர்வாகத்திற்கு விடுத்துள்ள கோரிக்கையில், அப்பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக, நந்தியன் குடிக்காடு மற்றும் சோழன் குடிக்காடு கிராமங்களைச் சேர்ந்த பத்து பேருக்கும் மேற்பட்டோர் கதண்டு கடித்ததில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையடுத்து, மாவட்ட கலெக்டர் ,செந்துறை தாசில்தார், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் தீயணைப்பு துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு கதண்டு கூடுகளை அகற்ற வேண்டுமென தமிழ்ப் பேரரசு கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என கோரிக்கை விடுத்துள்ளார்.






