• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

நீட் தேர்வில் நாமக்கல் மாணவி கீதாஞ்சலி முதலிடம் பெற்று சாதனை

தமிழகத்தில் நீட் தேர்வில் 710 மதிப்பெண்கள் பெற்று நாமக்கல்லை சேர்ந்த மாணவி பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.
தமிழகத்தில் 37 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் இரண்டு அரசு பல் மருத்துவக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன.

அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் , இதற்கான கலந்தாய்வு 19ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மீதமுள்ள 85 சதவீத இடங்கள் தனியார் கல்லூரிகளில் மாநில அரசுஇடங்கள் மற்றும் தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டு வருகிறது.

இந்த சூழலில் இதற்கான தரவரிசைப் பட்டியல் நேற்று சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியத்தால் வெளியிடப்பட்டது. அரசு ஒதுக்கீட்டில் 24,949 பேரும், நிர்வாக ஒதுக்கீட்டில் 14,913 பேரும், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீடில் 1,806 பேர் இடம் பிடித்துள்ளனர்.

இதில் அரசு ஒதுக்கீடு தரவரிசைப் பட்டியலில் நீட் தேர்வில் 720 மதிப்பெண்களுக்கு 710 மதிப்பெண்கள் பெற்று தமிழகத்தில் முதலிடத்தை நாமக்கல் மாணவி கீதாஞ்சலி பெற்றுள்ளார். இவர் அகில இந்திய அளவில் 23-வது இடத்தை தக்கவைத்துள்ளார்.

நாமக்கலைச் சேர்ந்த பிரவீன் 710 மதிப்பெண்களுடன் 2 ஆவது இடத்தையும், சென்னை அண்ணாநகர் பிரசன் ஜித்தன் என்ற மாணவன் 710 மதிப்பெண்களுடன் 3ஆவது இடத்தையும் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.