நாகை நீலாயதாட்சியம்மன் கோவிலில் நடராஜர் நடன வித்யாலயா சார்பில் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நடராஜர் நாட்டிய வித்யாலயாவின் குரு வைதேகி ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். ஈரோடு ஆருத்ரா நாட்டியாலயாவின் குரு தினகரன் முன்னிலை வகித்தார். நடன ஆசிரியர் பாலகுமார் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் மாணவி பூர்ணா ஸ்ரீ தத்ரூபமாக பரதநாட்டியம் ஆடி அசத்தினார். அவருக்கு நாட்டிய குருக்கள் வைதேகி ரவிச்சந்திரன், தினகரன் ஆகியோர் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழை வழங்கினர். இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு நாட்டிய அரங்கேற்றத்தை கண்டு களித்தனர்.