கோவையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கட்சியினரை காவல்துறையினர் கைது செய்தனர். நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கைது செய்யப்பட்டார்.
அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் பலாக்காரம் தொடர்பாக சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் சீமான் கைது செய்யப்பட்டதை கண்டித்து, கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் முன்பாக, இன்று பிற்பகல் நாம் தமிழர் கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அக்கட்சியின் மண்டல செயலாளர் வகாப் தலைமையில் 50 க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினர் காந்திபுரம் பேருந்து நிலையம் முன்பாக, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது கைது செய்யப்பட்ட சீமானை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும், பாலியல் துன்புறுத்தல் வழக்கில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
இதனைத் தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினரை காவல்துறையினர் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர். மறியல் போராட்டம் காரணமாக காந்திபுரம் பேருந்து நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.