• Sun. Oct 26th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

N.M.ஹீசைன் தயாரிக்கும் திரைப்படம் – முதல் மனிதன்.

Byadmin

Aug 5, 2021

இன்டர்நேஷனல் பிக்சர்ஸ் பெருமையுடன் வழங்கும்

தற்போது உலக நாடுகளில் நடக்கும் சாதி, சண்டை மத வெறுப்பு பிரச்சாரம் ஆகியவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் முதன் முதலாக தோன்றிய மனிதன் என்ன சாதி? என்ன மதம்? அவர்கள் வழியில் வந்த நாம் என்ன சாதி? என்ன மதம்? என்று ஒவ்வொருவர் மனதிலும் ஆழமாக அழுத்தமாக பதியும் படி உரக்கச் சொல்லியிருக்கும் இயக்குனர் சாதியையும் மதத்தையும் நாம் தான் உருவாக்கிக் கொண்டோம் கடவுள் உருவாக்கவில்லை என்பதை மிக அழகாக புதிய கோணத்தில் புதிய கூறி, மனிதர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் மனித நேயத்துடன் ஏற்றத் தாழ்வு இல்லாமல் வாழவேண்டும், என்பதை சொல்லும் அற்புத திரைக்காவியம் “முதல் மனிதன்” இதன் படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்டப் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது.

இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடத்த படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

நடிகர் உதயநிதி ஸ்டாலின் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கும் படத்தில் மற்றும் இயக்குனர் ஹரி இயக்கும் AV33 படத்தில் மட்டுமில்லாமல் மலையாள நடிகர் மம்முட்டி அவருடைய தங்கை மகன் அஸ்கர் சவுதா அவருடன் கதாநாயகியாக நடித்த “சான்ராரோஸ்” இதில் கதாநாயகியாக நடித்திருக்கிறார், மற்றொரு நாயகியாக ரோஷினி நடிக்கிறார், புதுமுக நாயகனாக பாசித், மற்றும் இதுவரை நடித்திராத மாறுபட்ட முக்கியக் கதாபாத்திரத்தில் நடிகை கௌசல்யா, நடிக்கிறார் மேலும் ஆடுகளம் நரேன், மாரிமுத்து, கராத்தே ராஜா, சூப்பர் குட் லட்சுமணன்,போண்டாமணி, கிரேன் மனோகர், கொட்டாச்சி, கிங்காங், கவிதாலயா மகாலட்சுமி, கம்பம் மீனா, ஆகியோர் நடிக்கிறார்கள்.

கவிப்பேரரசு வைரமுத்து பாடல் எழுத, தாஜ்நூர் இசை அமைக்க, மோகனராமன் ஒளிப்பதிவு செய்ய, சங்கர்.கே படத்தொகுப்பை கவனிக்க, நடனம் ராதிகா, அரங்க அமைப்பு நந்தகுமார் அமைக்க, கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ளார் இயக்குனர் ராஜராஜதுரை…..