• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

நாடாளுமன்றத்தில் அத்துமீறி நுழைந்த மர்ம நபர்கள் கைது..!

Byவிஷா

Dec 13, 2023

நாடாளுமன்ற மக்களவையில் இன்று பார்வையாளர் மாடத்தில் இருந்து திடீரென்று எகிறி குதித்த 2 நபர்கள் புகை போன்ற பொருட்களை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. அத்துமீறி உள்ளே மக்களவையில் நுழைந்த 2 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாடளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த வார திங்கள் கிழமை முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 2001ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி பயங்கரவாத அமைப்பு இந்திய பாராளுமன்றத்தில் ஒரு வாகனத்தில் வந்து கடும் தாக்குதல் நடத்தினர். அந்த தாக்குதல் முறியடிக்கப்பட்டாலும், அந்த தாக்குதலில் 9 பேர் உயிரிழந்த்னர். இந்த தாக்குதலின் 22ஆம் ஆண்டு நினைவஞ்சலி இன்று மக்களவையில் அனுசரிக்கப்பட்டு இருந்தது. அந்த சமயம் பாராளுமன்ற பார்வையாளர்கள் கேலரியில் இருந்த ஒரு பெண், ஒரு ஆண் என இரு நபர்கள் மக்களவையில் பாதுக்காப்பு அரண் மீறி உள்ளே நுழைந்தனர். கையில் வைத்து இருந்த மஞ்சள் நிற வண்ணப்புகை வீசும் ஒரு வகை பட்டாசை வீசினர். இதனால் அங்கு பெரும் பதற்றம் உண்டானது.
உடனே சுத்தரித்து கொண்ட பாதுகாவலர்கள் அவர்களை உடனடியாக கைது செய்து வெளியே அழைத்து சென்றனர். அவர்களிடம் தற்போது தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாடாளுமன்ற தாக்குதல் நினைவஞ்சலி நடைபெறும் தினத்தன்று இரண்டு பேர் நாடாளுமன்றத்தில் அத்துமீறி நுழைந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பாராளுமன்றத்தில் தடை செய்யப்பட்டுள்ள ஒரு பொருளை எப்படி உள்ளே கொண்டு வந்தார்கள் என்றும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இது குறித்து காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் கூறுகையில்,
“திடீரென்று இரு நபர்கள் பார்வையாளர்கள் அரங்கில் இருந்து சபைக்குள் குதித்து கையில் வண்ணபூச்சிகளை வைத்திருந்தனர். அதன் மூலம் மஞ்சள் புகையை உமிழபட்டது. அவர்களில் ஒருவர் சபாநாயகர் நாற்காலியை நோக்கி ஓட முயன்றார். அவர்கள் சில முழக்கங்களையும் எழுப்பினர். புகை விஷமாக கூட இருந்திருக்கலாம். இது 2001ஆம் ஆண்டு பாராளுமன்றம் தாக்கப்பட்ட டிசம்பர் 13ஆம் தேதியன்று நடைபெற்று இருப்பது கடுமையான பாதுகாப்பு மீறலாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த சம்பவத்தை அடுத்து பாராளுமன்றத்தில் இருந்து அனைவரும் வெளியேற்றப்பட்டனர். தற்போது பாராளுமன்றம் முழுவதும் தீவிர சோதனைக்கு உட்படுத்த பாதுக்காப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.