• Fri. Feb 13th, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

“என் ஊர் என் கனவு” திட்டம் அளவிலான கருத்தரங்கம் சா.சி.சிவசங்கர்..,

ByT. Balasubramaniyam

Feb 12, 2026

அரியலூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் “என் ஊர் என் கனவு” திட்டம் 2030 மாவட்ட அளவிலான கருத்தரங்கம் அரியலூர் தனியார் அரங்கில் நடைபெற்றது. கருத்தரங்கினை போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் துவக்கி வைத்து உரையாற்றினார்.

அமைச்சர் தனது உரையில், 2030-ஆம் ஆண்டுக்குள் மாவட்டத்தின் முழுமையான வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு செயல்திட்டங்கள் வடிவமைக்கப்படுகின்றன எனக் குறிப்பிட்டார். அரியலூர் மாவட்டத்தை மேம்படுத்தும் வகையில் உட்கட்டமைப்பு வசதிகள், தொழிற்துறை வளர்ச்சி, சுகாதாரம், சமூக நீதி, இளைஞர் முன்னேற்றம், வேளாண்மை மேம்பாடு, நிலைத்தன்மை மற்றும் சுற்றுலா வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு கருப்பொருட்களை மையமாகக் கொண்டு கருத்தரங்கம் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பொ.இரத்தினசாமி, அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் முனைவர் ஆ.ரா.சிவராமன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் சு.தேன்ராஜ், உதவி திட்ட அலுவலர் (டிஆர்டிஏ) ரெ.நந்தகோபால கிருஷ்ணன், ஒன்றிய திமுக செயலாளர் அறிவழகன் , அன்பழகன், தெய்வ இளையராஜன் , பொதுகுழு உறுப்பினர் இரா .பாலு , அரியலூர் நகர திமுக செயலாளர் முருகேசன், நகர்மன்றத் தலைவர் சாந்தி கலைவாணன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.