நல்ல கூட்டம் நல்ல ரெஸ்பான்ஸ் மகிழ்ச்சி என் ஆசீர்வாதம் எப்பொழுதும் விஜய்க்கு இருக்கும் சென்னை விமான நிலையத்தில் நடிகர் விஜயின் தந்தை சந்திரசேகர் பேட்டி:-

தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் நடைபெற்றது இதில் கலந்து கொள்வதற்காக விஜயின் தந்தை சந்திரசேகர் மற்றும் அவரது தாய் சோபனா ஆகியோர் சென்றிருந்த நிலையில் தற்சமயம் விமானம் மூலம் சென்னை திரும்பினர் அப்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் சந்திரசேகர்,

மாநாட்டில் ரொம்ப சந்தோசமாக விஜய் இருந்தார். நன்றாக இருந்தது. மாநாடு நல்ல ரெஸ்பான்ஸ் இருந்தது. நல்ல கூட்டம். என்னுடைய ஆசீர்வாதம் எப்பொழுதும் விஜய்க்கு இருக்கும் எனக் கூறி புறப்பட்டுச் சென்றார்.




