புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் அருள்பாலித்து வரும் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான திருவிழாவை முன்னிட்டு கந்தர்வகோட்டை விஸ்வகர்மா பொதுமக்களால் 40 ஆம் ஆண்டு மண்டகப்படி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. காலை முதல் நடைபெற்ற இவ்விழாவில் கந்தர்வகோட்டை சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.

முன்னதாக பகல் 12 மணி அளவில் கஞ்சிவார்த்தல் நிகழ்வு நடைபெற்றது. இதில் அம்மனுக்கு படைக்கப்பட்ட கஞ்சி மற்றும் கேழ்வரகு கூழ் ஆகியவை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து அறுசுவை அன்னதானமும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

பின்னர் மாலை 7 மணி அளவில் கண்கவர் வானவேடிக்கையுடன் கூடிய இன்னிசை மேல கச்சேரியுடன் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. இந்நிகழ்வில் கந்தர்வகோட்டை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலை சுற்றியுள்ள நான்கு மாட வீதிகளின் வழியாக நடைபெற்ற திருவீதி உலாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்ரீ முத்துமாரியம்மன் அருளை பெற்றனர்.













; ?>)
; ?>)
; ?>)