கரூரில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கமிட்டி சார்பில் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட திருமாநிலையூர் பகுதியில் உள்ள தனியார் திடல் ஒன்றில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

இந்த சிறப்பு தொழுகையில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். தொழுகைக்கு பிறகு இஸ்லாமிய மக்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பறிமாறிக் கொண்டனர்.
உற்றார், உறவினர், நண்பர்களோடு தங்கள் அன்பையும் சந்தோஷத்தையும் பகிர்ந்து கொண்டு ரம்ஜான் ஈகை திருநாளை தவ்ஹீத் ஜமாஅத் கமிட்டியினர் கொண்டாடி மகிழ்ந்தனர்.