• Sat. May 30th, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

குழந்தைகளுடன் பொங்கல் விழாவை கொண்டாடிய, இசையமைப்பாளர் D. இமான்

Byஜெ.துரை

Jan 19, 2024

உசிலம்பட்டி கிராம மக்கள் மற்றும் குழந்தைகளுடன் பொங்கல் விழாவை கொண்டாடினார் இசையமைப்பாளர் D. இமான்.

தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களுக்கு இசை அமைத்து தன்னுடைய பாடல்களால் தமிழக மக்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்த இசையமைப்பாளர் D.இமான் அவர்கள், உசிலம்பட்டி அருகே உள்ள கிராம மக்கள் நடத்திய பாட்டுப்போட்டி, நடன போட்டியில் கலந்துகொண்டு அங்குள்ளவர்களை மிகவும் சந்தோஷப்படுத்தி உள்ளார்.

இவர் தனக்கென்று ஒரு TRUST ஆரம்பித்து, அதன் மூலமாக பல உதவிகளை செய்து கொண்டு வருகிறார். உதவி கேட்டு வருபவர்களுக்கு உதவி செய்தும், பல உதவிகளை தேடி போய் செய்தும் வருகிறார்.

இசையமைப்பாளர் இமான் அவர்கள் உசிலம்பட்டிக்கு சென்று அங்குள்ளவர்களை ஊக்குவித்தது மதுரை மாவட்ட உசிலம்பட்டி மக்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த விழாவை FRIENDS FILM FACTORY TEAM அவர்களும் BUTTERFLY NETWORK TEAM இருவரும் இவ்விழாவை நடத்தினர்.