தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் இன்று ஆங்கில புத்தாண்டு முன்னிட்டு திருப்பரங்குன்றம் சுற்றியுள்ள புல்லூர் வெளியூர் மற்றும் வெளி மாநில பக்தர்கள் கூட்டம் கூட்டமாக சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று காலை மூன்றாம் படை வீடான பழனி கோயில் தரிசனம் செய்துவிட்டு முதல் படை வீடான மதுரை திருப்பரங்குன்றத்தில் சுவாமி தரிசனம் செய்வதற்காக வருகை புரிந்தார் பாடகி சிறுமி தியா.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில்:-
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு முருகனின் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் சாமி தரிசனம் செய்து விட்டேன். மதுரை தான் எனக்கு சொந்த ஊர். ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு திருப்பரங்குன்றத்தில் சாமி தரிசனம் செய்தது மிக்க மகிழ்ச்சி.

அனைத்து முருக பக்தர்களுக்கு இந்த வருடம் சீரும் சிறப்புமாக நல்லபடியாக சகல யோகங்களும் பெருவாழ்வு கிடைக்கும்படி முருகப்பெருமானிடம் நலமாற வேண்டிக் கொள்கிறேன் என்றார். இன்னைக்கு முருகப்பெருமான் வெள்ளிக்கவசத்தில் அழகாக இருந்தார். தெய்வானை அழகாக காட்சியளித்தார். ஆங்கில புத்தாண்டை திருப்பரங்குன்றத்தில் தரிசனம் செய்தது மிக்க மகிழ்ச்சி.
பக்தர்கள் ஆங்கில புத்தாண்டு இன்றைக்கு திருப்பரங்குன்றத்தில் பிரம்மாண்டமாக நிறைய முருக பக்தர்கள் வந்துள்ளனர். குடும்பத்தில் உள்ள அனைத்து சாமி தரிசிக்கலாம். ஐந்து சமயங்களும் தரிசிக்கலாம் சிவ பெருமான் அம்பாள் விநாயகர் முருகப்பெருமாள் சூரிய பகவான் இப்படி ஐந்து சமயங்களில் தரிசிக்கலாம் இந்த திருப்பரங்குன்றத்துடைய தனி சிறப்பு.




